India Languages, asked by gauthamm565, 1 month ago

பின்வரும் பகுதியைப் படித்து, கொடுக்கப்பட்ட பலவுள்தெரிவுசெய்
வினாக்களுக்கேற்ற விடை எழுதுக.
தேவநேயப்பாவாணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று அழைக்கப்பட்டார். தமிழ், உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். அது கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவர்தம் நூல்களின் வழி உலகிற்கு எடுத்தியம்பினார்.
வினாக்கள் : 5 x 1 = 5
1. பாவாணர் எதில் வல்லுநராய்த் திகழ்ந்தார் ?
(அ) சொல்லாராய்ச்சியில் (ஆ) மொழியாராய்ச்சியில்
(இ) தமிழாராய்ச்சியில் (ஈ) இலக்கிய ஆராய்ச்சியில்
2. பாவாணர் எத்தனை மொழிகளின் மொழி இயல்புகளைக் கற்றறிந்தார் ?
(அ) இருபதுக்கும் மேலானது (ஆ) முப்பதுக்கும் மேலானது
(இ) நாற்பதுக்கும் மேலானது (ஈ) ஐம்பதுக்கும் மேலானது
3. பாவாணர் யாருடைய வழியில் நின்று பணியாற்றினார் ?
(அ) திரு.வி.க.வின் வழியில் (ஆ) தந்தையின் வழியில்
(இ) வரதராசனாரின் வழியில் (ஈ) மறைமலை அடிகள் வழியில்
4. பாவாணர் எத்தகைய அறிவைப் பெற்றிருந்தார் ?
(அ) அளப்பரிய அறிவு (ஆ) ஒப்பரிய அறிவு
(இ) சிறப்பான அறிவு (ஈ) நுட்பமான அறிவு
5. ஆரியத்திற்கு மூலமாய் இருப்பது எது ?
(அ) திராவிடம் (ஆ) வடமொழி (இ) தமிழ் (ஈ) சமற்கிருதம்

Answers

Answered by shivani5452
6

Answer:

1.(அ) சொல்லாராய்ச்சியில்

2.(இ) நாற்பதுக்கும் மேலானது

3.(ஈ) மறைமலை அடிகள் வழியில்

4. (ஆ) ஒப்பரிய அறிவு

5.(இ) தமிழ்

Explanation:

MARK ME AS BRAINLIEST IF YOU GOT HELPED BY MY ANSWER ☺️

Similar questions