தமிழ்
தமிழ் மொழி எவ்வாறு மொத்தமாய் வளர்ந்தது?
Answers
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகின் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்,[13] ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
சுத்தவெளி என்ற சிவத்தை உணர்ந்த மகான்கள்... அத்தகைய பேரின்பநிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாதபோதும், விவரிக்க முயன்றபோது ஆதிசிவனின் அருளால் உலகில் தோன்றிய மொழி தமிழ்.
"ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்".
- மகாகவி பாரதியார் எழுதிய பாடலின் சில பகுதிகள்.
கன்னியாகுமரிக்குத் தெற்கே கடற்கோளால் அழிந்துபோன லெமூரியாக் கண்டத்தில்... கபாடபுரம் எனும் பழந்தமிழ் நகர்ப்புறத்தில் ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதற்தமிழ்ச் சங்கம் நிறுவி இயற்றப்பட்ட பழந்தழிழ் நூற்பாடல்கள் நமக்கு கிடைக்கப் பெறாது மறைந்துபோனது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதற் சங்கம் கண்ட தமிழ்த்தாய்... அதற்கு முன் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிவளம், இலக்கணம், புலமை மிக்க சான்றோர்கள் கொண்டிருந்திருக்க வேண்டும்...? என்பதை யூகித்துப் பாருங்கள். அன்றைய கன்னித்தமிழ் மொழியுடன் தொடர்புடைய எத்தனையோ விதமான மொழிகள் (இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, பாலி, பாரசீகம், சமஸ்கிருதம் இன்னும் பல...) இப்போது வழக்கொழிந்துப் போய்விட்டன.
"கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்"