India Languages, asked by livinbright43, 3 months ago

மண்ணாசை காரணமாக போருக்கு செல்வது​

Answers

Answered by desicrewvanishwari
0

Answer:

2.1 புறப்பொருள் பிரிவுகள்

வீரம் - அதை வெளிப்படுத்தும் போர் - அதை ஒட்டிய

‘கொடை’ முதலான செய்திகள் எனப் பல்வகைப்படும் புறப்பொருள்

பற்றிய இலக்கணத்தை வரையறுத்த நூல்கள், அவற்றைப் பல்வேறு

‘திணை’களாக வகுத்து விளக்கியுள்ளன. (திணை = பிரிவு) அவை 9

வகைப்படும். அவையாவன

(1)

வெட்சித்திணை

(2) கரந்தைத்திணை

(3)

வஞ்சித்திணை

(4) காஞ்சித்திணை

(5)

நொச்சித்திணை

(6) உழிஞைத்திணை

(7) தும்பைத்திணை

(8)

வாகைத்திணை

(9) பாடாண்திணை

புறப்பொருள் திணைப் பிரிவுகள் ஒன்பது என்பதில்

வேறுபட்ட கருத்தும் உண்டு.

வெட்சி - கரந்தை என்னும் இரண்டையும் ஒன்றாக்கியும்,

அதுபோலவே நொச்சி - உழிஞை என்னும் இரண்டையும்

ஒன்றாக்கியும், புறத்திணை ஏழு என வழங்குவர். இது

தொல்காப்பியம் வகுத்துக் காட்டும் முறை.

2.1.1 திணைக்குரிய செய்திகள்

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது

எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி

அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்

பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்

செரு வென்றது வாகையாம்

(வட்கார் = பகைவர் ; உட்காது = அஞ்சாது ; பொருவது =

போரிடுவது ; செரு = போர்)

என்னும் பழைய பாடல் புறத்திணைகள் ஒவ்வொன்றிலும்

உள்ளடங்கிய செய்தி யாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

பகைவரது பசுக்கூட்டங்களைக் கவர்தல், அவர்கள் அதை

மீட்டல் ; மண்ணாசை கொண்டு போரிட வருதல், வரவிடாமல்

தடுத்தல் ; மதிலை வளைத்துப் போரிடல் - மதிலுக்குள் இருந்து

தடுத்தல் ; எதிர் எதிரே நின்று போரிடல் - அதில் ஒருவர் வெற்றி

பெறுதல் ; வென்றவர் பெருமையைப் பிறர் பேசுதல் எனப்

புறப்பொருள் திணைக்குரிய செய்திகள் அமைகின்றன.

மேற்கண்ட முறையில் போர் நிகழ்த்தும் மறவர்கள் (வீரர்கள்) அதற்கேற்ற மலர்களைச் சூடிச் செல்வர்.

2.1.2 வெட்சித்திணை

பகைவரைப் போருக்கு அழைத்து அதில் வெற்றி பெற

விரும்பும் ஒரு நாட்டினர் முதலாவதாக அப்பகை நாட்டில் உள்ள

பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வரும் போர்முறைக்கு

‘வெட்சித்திணை’ என்று பெயர். அவ்வீரர்கள் வெட்சிப் பூவைச்

சூடிச் செல்வர்.

இவ்வெட்சிப் போர் இரு வகைப்படும்.

(1)

மன்னுறு தொழில்

(2) தன்னுறு தொழில்

மன்னுறு தொழில்

தன் நாட்டு மன்னன் கட்டளை இட, அதனை ஏற்று, பகை

நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருவது மன்னுறு தொழில்

எனப்படும்.

தன்னுறு தொழில்

மன்னனது கட்டளை இன்றியும், அவனது குறிப்புணர்ந்த வீரன்

பகை நாட்டுக்குத் தானே சென்று, பசுக் கூட்டங்களைக் கவர்ந்து

வருவது தன்னுறு தொழில் எனப்படும்.

2.1.3 வெட்சித்திணையின் துறைகள்

‘ஆநிரை’ எனப்படும் பசுக் கூட்டங்களைப் பகைவரிடம்

இருந்து கவர்ந்து வருதலாகிய வெட்சி 19 துறைகளை

(உட்பிரிவுகளை) உடையது. அவற்றுள் முதன்மையான சில :

விரிச்சி

(நிரை) பசுக் கூட்டங்களைக் கவரும் செயல் ஈடேறுமா

என்பது குறித்து நற்சொல் (குறி) கேட்டல்.

வேய்

பகைவரது இருப்பிடம் சென்று, அங்குள்ள சூழல்களை

மறைமுகமாக அறிந்து வருவது.

ஆகோள்

ஆ - பசு ; கோள் - கவர்ந்து கொள்வது.

சுரத்துய்த்தல்

கவர்ந்து வந்த பசுக்களுக்கு இடையூறு இல்லாதபடி கொண்டு

செல்வது.

பாதீடு

பகுத்து வழங்குவது ; ஒரு நாட்டின் தலைவன் தன் வீரர்கள்

கவர்ந்து கொண்டுவந்த பசுக்களை அவரவர் தகுதிக்கு ஏற்பப்

பிரித்துக் கொடுப்பது.

இவ்வாறு வெட்சித்திணை 19 உட்பிரிவுகளைக்

கொண்டிருப்பதை அறியலாம்.

2.1.4 கரந்தைத்திணை

வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை மீட்டுவர

நிகழ்த்தப்படும் போர், கரந்தை எனப்படுகிறது. அவ்வாறு நிரை

மீட்டல் (என்னும்) போர் நிகழ்த்தச் செல்லும் வீரர்கள் கரந்தைப்

பூவைச் சூடிச் செல்வது மரபு.

2.1.5 கரந்தைத்திணையின் துறைகள்

கரந்தை அரவம், செலவு, போரிடல், புண்ணொடு வருதல்,

போர்க் களத்திலே இறத்தல், தனி ஒருவனாகி எதிர்த்தல் (ஆளெறி

பிள்ளை) கையறுநிலை, நெடுமொழி கூறல் முதலான 13

உட்பிரிவுகளை உடையது கரந்தைத்திணை. முதன்மையான

சிலவற்றுக்கான விளக்கங்களைக் காண்போம் :

புண்ணொடு வருதல்

நிரை மீட்கும் போரில் ஈடுபட்டு, அதனால் உடலில் புண்பட்டு

வருதல்.

போர்க்களத்து ஒழிதல்

போர்க்களத்திலேயே இறந்து போதல்.

ஆள் எறி பிள்ளை

பிள்ளைத் தன்மையோடு (விளைவு அறியாத விளையாட்டு்ப்

பிள்ளைபோல) ஒரு வீரனே தனித்து நின்று பகைவரை அழித்து

ஆ நிரையை மீட்டல்.

கையறுநிலை

களத்தில் இறந்துபோன வீரனை எண்ணி வருந்திப் பேசுவது.

நெடுமொழி கூறல்

வீரன் ஒருவன் தன் மேம்பாட்டினைத் தானே தன்

மன்னனிடம் எடுத்துரைப்பது.

குடிநிலை

போரில் வல்ல வீரக்குடியினது மாண்புகளை ஒரு வீரன்

வெளிப்படுத்திப் பேசுவது. இதனை விளக்க வரும் பாடலில்தான்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு,

முன்தோன்றி மூத்த குடி

எனும் புகழ்மிக்க அடிகள் காணப்படுகின்றன. (புறப்பொருள்

வெண்பாமாலை, 35

Similar questions