India Languages, asked by vidyaselvi83, 2 months ago

கப்பல்கள் நீரிலேயே இருப்பவை என்பதால் நீர்மட்ட வைப்பிற்காக என்ன வகையான மரங்களைப் பயன்படுத்தினர்?​

Answers

Answered by honeyhd10
2

Answer:

→ பெருந்திரளான மக்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் பெரிய கப்பல்களைத் தமிழர் உருவாக்கினர்.

→ நீண்ட தூரம் கடலிலேயே செல்ல வேண்டி இருந்ததால் கப்பல்களைப் பாதுகாப்பனவையாகவும் வலிமைமிக்கவையாகவும் உருவாக்கினர்.

→ கப்பல் கட்டுவதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் தமிழர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். தண்ணீரால் பாதிப்பு அடையாத மரங்களையே கப்பல் கட்டப் பயன்படுத்தினர். நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களைப் பயன்படுத்தினர்.

→ பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கு போன்ற மரங்களைப் பயன்படுத்தினர். நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பலை உருவாக்கினர்.

→ மரங்களையும் பலகைகளையும் இணைக்கும் போது அவற்றுக்கு இடையே தேங்காய் நார் அல்லது பஞ்சு இவற்றில் ஒன்றை வைத்து இறுக்கி ஆணிகளை அறைந்தனர். மரத்தால் ஆன ஆணிகளையே பயன்படுத்தினர்.

Similar questions