India Languages, asked by EnergizerBunny, 2 months ago

இன்றைய
சூழலில் ஆன்லைன்
வகுப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி
உள் நண்பனுக்குக் கடிதம் ஒன்று
எழுதுக​

Answers

Answered by lehashree
3

Answer:

கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதும், மாணவர்கள் கல்வி கற்பதும் பெரும் பாதிப்பில் உள்ளது.

சவால்கள் பல இருந்த போதும், பெரும்பாலான தனியார் பள்ளிகள் 'ஆன்லைன் வகுப்புகள்' மூலம் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த துவங்கிவிட்டனர். ஆனால், கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்விமுறை சாத்தியமேயில்லை என்கின்றனர் கல்வி ஆலோசகர்கள்.

"பழங்குடியின மக்களின் குழந்தைகள் முதல் தலைமுறை கல்வி கற்பவர்களாக உள்ளனர். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சமதளப் பகுதியில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியப்படாத நிலை உள்ளது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மின்சார வசதி என்பது இல்லாத பகுதிகள் நிறைய உண்டு. சில தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும். இந்த சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் பழங்குடியின மாணவர்களைப் பங்கெடுத்துக் கொள்ள நிர்ப்பந்திப்பது, அந்த குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் நிகழ்வாகத்தான் இருக்கும்" என்கிறார் கல்வி ஆலோசகர் வி.பக்தவச்சலம்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார் அணை அருகே அமைந்துள்ள ஆனைமலை மற்றும் சின்னார்பதி கிராமங்களில் மலசர் மற்றும் எரவள்ளர் எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இன்றுவரை இப்பகுதிகளில் மின்சார வசதியும், இணைய வசதியும் கிடையாது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கைப்பேசிகள் பயன்படுத்துவதில்லை. கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடியில் இப்பகுதி மக்கள் சிக்கித்தவிப்பதோடு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதையடுத்து ஏராளமான மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆழியார் அன்பு நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேலு, தனது மகனின் கல்வி எதிர்காலம் குறித்து கவலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

கொரோனா காரணத்தினால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் இருப்பவர்கள் அனுபவிக்கும் வசதிகள் எதுவும் எங்கள் பகுதியில் இல்லை. என் மகனுக்கென தனியாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்கும் அளவிற்கு எனது வருமானமும் இல்லை. நிலைமை இப்படி இருக்க 'பத்தாம் வகுப்பு தேர்வை என் மகன் எப்படி எழுதப்போகிறான்?' என்று கவலையாக இருக்கிறது. நகரில் படித்து வரும் மாணவர்களோடு போட்டியிடும் அளவிற்கு பொருளாதாரத்திலும், வசதிகளிலும் பின்தங்கிய எங்களது மாணவர்கள் வளரமுடியுமா என்பதே சந்தேகம்தான்" என வேதனையுடன் பேசினார் தங்கவேலு.

hope is helps you

Similar questions