French, asked by vishalpaul2836, 2 months ago

சாலை வசதி வேண்டி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பக் கடிதம் எழுதுக.

Answers

Answered by newsbreaking332
5

அனுப்புநர்:

பெயர்,

முகவரி,

இடம்.

பெறுநர்:

வட்ட ஆட்சியர் அவர்கள்,

வட்ட ஆட்சியர் அலுவலகம்,

இடம்.

மதிப்புக்குரிய ஐயா,

பொருள்: சாலை வசதி வேண்டி விண்ணப்பம்.

நான் வசிக்கும் தெருவில் ஏறத்தாழ 400 குடும்பங்கள் உள்ளனர். சாலை 200 மீட்டர் நீளமும் பத்து மீட்டர் அகலமும் கொண்டது. மக்கள் நெருக்கமும், போக்குவரத்தும் மிகுதியாக உடையது. தெருவோரங்களில் காய்கறிச் சந்தையும் கொண்டது. இத்தகைய தெருவில் நல்ல சாலை அமைக்கப்பட வில்லை. கல்லும் மண்ணுமாகச் சாலை முழுவதும் பாழ்பட்டுக் கிடக்கின்றது.காற்று காலங்களில் தெருவிலுள்ள மண்ணும் தூசியும் வீட்டிற்குள் குடியேறிவிடும். மழைக்காலங்களில் தெரு முழுவதும் சேறும் சகதியும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும். நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.ஆகவே மக்கள் படும் கடுமையான சிரமத்தை மனதில் கொண்டு மிக விரைவில் நல்ல தார்ச்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இடம்:

நாள்:

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள,

பெயர்.

உறைமேல் முகவரி:

பெறுநர்:

வட்ட ஆட்சியர் அவர்கள்,

வட்ட ஆட்சியர் அலுவலகம்,

இடம்.

Similar questions