இ. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார் . வ.உ.சி அவர்கள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத்
தலைவர் என்னும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பலுக்குப் போட்டியாக
உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள்"
சுதேசி நாவாய்ச் சங்கம்"
என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச்
செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார்
பாடல்களை விரும்பிக் கேட்பார்.
வினாக்கள் :
1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
3. வ.உ.சி. யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
4. வ.உ.சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?
5.
வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
Answers
Answered by
2
Answer:
hi
Explanation:
1.வ.உ.சி
2.பாரதியாரை
3.பாரதியார்
4.வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத்
தலைவர் என்னும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்
Similar questions