இலக்கணம் என்றால் என்ன ?
Answers
Explanation:
இலக்கணம் என்றால் ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்பதற்குத் தேவையான விதிகளின் தொகுப்பு இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு
எழுத்து மற்றம் சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். இவற்றை எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும்.
தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து இலக்கண வ்கைகள் .உள்ளன.
hope it's helpful for you :-)
Answer:
இலக்கணம் என்பது ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்றுக்கொள்வதற்கு தேவையான விதிகளின் தொகுப்பு, இந்த இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு என்பது எழுத்து மற்றும் சொல் ஆகும். இது எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும்.
Explanation:
இலக்கணம் (பெயர்ச்சொல்)
இலக்கு + அணம்--->இலக்கணம்.
இலக்கணம் என்றால் ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்பதற்குத் தேவையான விதிகளின் தொகுப்பு இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு
எழுத்து மற்றம் சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். இவற்றை எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும்.
தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து இலக்கண வ்கைகள் .உள்ளன.
தமிழ் மொழியின் எழுத்து இலக்கணத்தில் தமிழ் எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை முதலியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன. இலக்கண நூல்கள்: தொல்காப்பியம், நன்னூல், நேமிநாதம், முத்துவீரியம்.
தமிழ் மொழியின் சொல் இலக்கணத்தில், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய சொல்லின் வகைகளும் திணை, பால், எண், இடம், காலம் ஆகியனவும் தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்), வேற்றுமை என்பனவும் விவரிக்கப்பட்டிருக்கும். இலக்கண நூல்கள்: தொல்காப்பியம், நன்னூல், நேமிநாதம், முத்துவீரியம்.
தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். சங்ககாலத்தில் இயற்றப்பட்ட எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய தொகை இலக்கியங்களுக்காக எழுதப்பட்ட இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். இவை அகப்பொருள் என்னும் காதல், காமம் பற்றியும் புறப்பொருள் என்னும் போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி பொருள்கள் பற்றிப் பேசுவனவாகும். இலக்கண நூல்கள்: இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள்.
தமிழ் யாப்பு இலக்கணம் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும், விதிவிலக்குகளையும் கூறுகிறது. 1. எழுத்து, 2.அசை, 3. சீர், 4. தளை, 5. அடி, 6. தொடை ஆறு வகைகளை 'யாப்பிலக்கணம்' கூறுகிறது.. செய்யுள்களின் அமைப்பு, ஓசை, பாக்களின் வகைகள் ஆகியவற்றைச் சொல்கிறது. .இலக்கண நூல்கள்: தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை.
தமிழ் அணி இலக்கணம் உவமை, உருவகம் ஆகியவற்றுக்கு அணி என்று பெயரிடப்பட்டு இவற்றின் இலக்கணத்தைச் சொல்கிறது. அணி என்றால் அழகு என்று பொருள். தொல்காப்பியம், வீரசோழியம், மாறனலங்காரம் ஆகிய அணி இலக்கண நூல்கள் உள்ளன. தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல் 35 வகையான அணிகளைப் பற்றி விவரிக்கிறது. இலக்கண