History, asked by itzShivam12, 17 days ago

தமிழகத்தில் முன்னோர்கள் பயிரிட்டு வந்த நெல் வகைகள் தற்பொழுது குறைந்ததற்கான காரணம்​

Answers

Answered by itzTotalKAMiNA
2

Answer:

பாரம்பரிய நெல் விதைகள் பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. [1] இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.

1959 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டக் பகுதியில் அமைந்திருந்த மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே உகந்தது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள் நோய் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக மாற்றம் செய்யப்பட்டு, பிற்காலத்தில் நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்.

பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற இயலவில்லை. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் சிறப்பு பெற்ற பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் தரும் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில் மறையத்தொடங்கின.[2]

Answered by Renumahala2601
1

Answer:

தமிழகத்தில் முன்னோர்கள் பயிரிட்டு வந்த நெல் வகைகள் தற்பொழுது குறைந்ததற்கான காரணம்

Similar questions