அறிவியல் கல்வியின் தேவை?
Answers
Answer:
Tamil ,Telgu IS THE ANSWER
Explanation:
உலகில் அறிவியலின் மதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. நடைமுறை வாழ்வில் அறிவியல் எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுகிறது. தகவல் தொடர்பு, போக்குவரத்து, வானிலை, தொழில்நுட்ப அபிவிருத்தி, உயிர் அறிவியல், புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள், அணு அறிவியல் போன்ற அனைத்து துறைகளும் அறிவியலை மையமாக கொண்டே உள்ளன.
அறிவியல், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 1. இயற்கை அறிவியல். இவை, உயிரியல் வாழ்க்கை மற்றும் இயற்கை விந்தைகள் ஆகியவை தொடர்பானது. 2. சமூக அறிவியல். இத்துறை சமூகம் மற்றும் மனிதனின் நடத்தை தொடர்பானது. நாம் தற்போது அடிப்படை அறிவியலான இயற்கை அறிவியலில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
பள்ளியளவில் பயிலும் அறிவியல் பாடம் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. கல்லூரி அளவில் பயிலும் அறிவியல் பாடத்தில் ஒவ்வொரு பிரிவும், தனித்தனியாக பிரித்து, புதிய முறை, புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.