Science, asked by satheshkumarl46, 14 days ago

புதுக்கவிதை குறித்து குறிப்பு

எழுதுக.​

Answers

Answered by vaishalicomca20
0

Explanation:

புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.[1]தமிழ் இலக்கிய வளர்ச்சியும் அதனோடு கூடிய தேவையும் புதுக்கவிதைக்கு வித்திட்டது. ஆங்கிலத்தில் New Poetry, Modern Poetry என அழைக்கப்பட்ட கவிதை வடிவம் தமிழுக்கே உரிய மரபில் புதுக்கவிதையாகத் திகழ்கிறது.

அமைப்பு தொகு

மரபுக்கவிதை போன்று சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை கொண்டிராத ஒன்றாக புதுக்கவிதை காணப்படுகின்றது.

புதுக்கவிதைகளில் காணும் காட்சியினை அலங்கார வார்த்தைகளின்றி, உள்ளதை உள்ளபடியே எளிய தமிழ்ச் சொற்கள் கொண்டே எழுதப்படும் கவிதை வடிவம்.

அடிவரையறை (வரி எண்ணிக்கை) தொகு

இத்தனை அடிகள்தான் எழுதப்பட வேண்டும் என்ற வரையறை இல்லை.

அடியமைப்பு (வரியமைப்பு) தொகு

ஒவ்வொரு அடியிலும் குறிப்பிட்ட சீர்கள் இருக்க வேண்டுமென்ற வரையறை இல்லை.

சொற்சுருக்கம் தொகு

சொற்சுருக்கம் இருக்க வேண்டியது புதுக்கவிதைக்கான முக்கிய அம்சம்.

ஒலிநயம் தொகு

பேச்சுவழக்குச் சொற்களிடையே ஒலிநயம் காணப்படுவது பொதுவானது.

சொல்லாட்சி தொகு

சொற்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதும் வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்குச் சார்ந்த சொற்களுக்கும் பாவிக்கப்படுகிறது.

தொடை நயம் தொகு

எதுகை, மோனை, இயைபு என்னும் தொடை நயங்களெல்லாம் கட்டாயம் என்ற நிலையில்லை.

யாப்புச் சாயல் மற்றும் நாட்டுப்புறச் சாயல் தொகு

அடிவரையறை செய்து எழுதும்போது மரபுக்கவிதை போன்று இது தோற்றமளிக்கும்.

வசன நடை மற்றும் உரையாடல் பாங்கு தொகு

வசன நடையும் உரையாடல் பாங்கும் சிறப்பாக எளிய முறையில் பாவிக்கப்படும்.

காட்சி அமைப்பு தொகு

ஒரு கருப்பொருளை காட்சியாகக் கொண்டு நம்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் எளிய வடிவம் புதுக்கவிதை

Similar questions