காட்டின் வளமே நாட்டின் வாம்" என்னும் தலைப்பில் ஒரு பக்க காலை கட்டுரை
எழுதுக
Answers
Answer:
answer
Explanation:
தமிழகத்தில் இந்தாண்டு நல்ல மழை பெய்தது. பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்தது. நீர் மேலாண்மையை அறிந்தவர்கள், காடுகளின் பங்கை நிச்சயம் ஒப்புக்கொள்வர். திருவள்ளுவர் "நாடு' அதிகாரத்தில் மலையைப் பற்றி "இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,' எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் பயனடைகிறது. உலகில் ஆறுகள் அனைத்தும் பனிமலை அல்லது மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன. பனிமலை( இமயமலை)யில் கங்கை உற்பத்தியாகிறது.
காவிரி, பெரியாறு, வைகை, தாமிரபரணி போன்றவை மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. மழைப்பொழிவு ஏற்படும் அனைத்து நிலப்பகுதியும் நீர்ப்பிடிப்பு பகுதிகள். இதில் பெய்யும் மழை நீர் காடாக இருந்தால், அது பூமியில் உள்ளிழுக்கப்பட்டு சிறு, சிறு நீருற்றுகளாக வெளிப்படும். பின், அவை ஓரிடத்தில் ஒன்று கூடி சிற்றோடைகளாகவும், அவை நீரோடையாகவும், பல ஒன்று சேர்ந்து ஆறாகவும் மாறுகிறது. இந்த மழை நீர் பாறை அல்லது விவசாய நிலத்தில் விழுந்தால், மழை பெய்த அன்றே (நிலத்தில் உறிஞ்சியது போக மீதம்) வடிந்து நீரோடை வழியாக ஓடி, நீர் நிலையை சென்றடைகிறது.
காடுகள் ஒரு வங்கியில் இருக்கும் முதலீடு போல் செயல்படுகிறது. காலப்போக்கில் நாம் பெறும் பயன் (வட்டி) போல், வற்றாத நீரோடை, ஆறுகளை தருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்பது நெறிமுறை. நம் நாட்டில் கீழ்க்கண்ட மாநிலங்களின் காடுகளின் அளவு, தண்ணீர் வளத்தை காணும் நமக்கு வல்லுநர்களின் கூற்று மெய்யாகிறது. இதில், 33.33 சதவீதத்திற்கு அதிகமாக காடுகள் உள்ளன. இவற்றில் தண்ணீர் பஞ்சம் அரிது.இதை கூர்ந்து கவனித்தால், காட்டிற்கும், ஒரு மாநிலத்தில் கிடைக்கும் தண்ணீர் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவரும். இமாச்சல், உ.பி., ஜம்மு காஷ்மீர், பீகாரில் காடுகளின் பரப்பளவு குறைவு என்றாலும், அம்மாநிலங்களின் வழியாக ஓடும் கங்கை இமயமலையில் உற்பத்தியாவதால், பெருமளவு நீரை கொண்டு வந்து, மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தி, நீர்வளத்தை தருகிறது.
நிலப்பரப்பில் 33.33 சதவீதம் காடுகள் இருந்தால், ஒரு நாட்டில் விவசாய வளம் பெருகும் என வல்லுநர்கள் கூறுவது சரியே. தமிழகத்தில் 17.41 சதவீத காடுகள் என்பது, வல்லுநர்கள் நிர்ணயம் செய்ததில் பாதி. தற்போதுள்ள அளவுபோல், இன்னும் ஒருமடங்கு காடு பெருகினால் நீர் வளம் பெருகும். தண்ணீர் வளம் பெருக, ஒரு நாட்டில் வனவளத்தை மேம்படுத்துவது அவசியம். மழை நீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றினால், கட்டாயப்படுத்தி, அதனையும் பொதுமக்கள் பின்பற்றினால் நீர் வளம் பெருகும். தனியார் நிலங்களில் மரம் வளர்த்தால் வன வளம் பெருகும்.