தாய்வழிக் குடும்பமுறை குறித்து எழுதுக.
Answers
பிற்காலத் தமிழகப் பண்பாட்டிற்குத் தாயகமாகத் திகழ்வது
சங்க காலப் பண்பாடாகும். இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின்
கண்ணாடி; சமூக நாகரிகத்தின் எதிரொலி. சமுதாயத்துடன் தொடர்பு
க�ொண்டுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென ஒரு வாழ்வை
அமைத்துக் க�ொள்கிறான். அங்ஙனம் அமைத்துக் க�ொள்ளும்போது
அவன் சமுதாயத்துடன் இணைந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அப்பொழுது அவன் தன்னுடைய விருப்பங்களைச் சமுதாயத்திற்
கேற்பவும், அதன் சட்டத்திட்டங்களுக்கு ஏற்பவும், வளைந்து க�ொடுத்து
நிறைவேற்றிக் க�ொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறான
சூழலில் ஒவ்வொருவரும் ஈடுபடும் போதுதான் ஒவ்வொரு நிலைக்கும்
சில வரையறைகள் மனிதனால் உருவாக்கப்பட்டு அவ்வரையறைக்கு
உட்பட்டு நடக்கும் நிலையும் ஏற்படுகின்றது. அதுவே நாளடைவில்
வாழ்க்கைக்கு உகந்த அறங்களாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்
படுகின்றன. இவ்வாறாக, மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு என
இரண்டிற்குமே அறங்கள் கூறப்பட்டுள்ளதைச் சங்க இலக்கியங்கள்
வழி அறியமுடிகின்றன.
இனி, குடும்பம், அதன் அமைப்பு மற்றும் குடும்பம் சார்ந்த
அறங்களுள் குறிப்பிடத் தகுந்த ஆண் - பெண் அறங்கள், அவற்றின்
உட்பிரிவுகள், வரையறைகள், அவை செயற்படும் விதங்கள்,
அவற்றிற்கான நெறிமுறைகள், அவற்றிற்கிடையேயான பாகுபாடுகள்
ஆகியவற்றைச் சங்க இலக்கியத்தின் வழி நோக்கலாம்