World Languages, asked by mnateshraja, 3 months ago

எழுத்துகள் ஒலிக்கும்
கால அளவை....
எனக் குறிப்பிடுகிறோம்.​

Answers

Answered by sumanrana8733233com
0

Answer:

which language is this I don't know

Answered by maswanthmjagatheeshw
1

Explanation:

➳ எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவு

மாத்திரை

➳ உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள்

முதலெழுத்துகள்

➳ க்,ங்,ச்,ஞ், ட், ண்

உயிர்மெய்யெழுத்துகள்

➢ தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.

குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)

நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)

தனி மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.

உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும்.

ஔகாரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம் என்பன ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.

மகரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.

➢ தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது.

Similar questions