English, asked by ssathyanarayan73, 1 month ago

அ) பத்தியை படித்து உணர்ந்து விடையளி: தன் நிறத்தையும் வடிவத்தையும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்பவை பச்சோந்திகள் சுறா மீனும் குதிரைக்கால் நண்டும் தங்கள் உடல்களில் மிகச்சில சிறிய மாற்றங்களுடன் டைனோசர்கள் காலத்தில் இருந்தே இருந்துவருகின்றன.இன்னும் தொடர்ந்து வாழ்கின்றன. மிருகங்களில் சில நீரிலும் நிலத்தில் வாழ வல்லவை அவ்வகையில் தவளைகள் மற்றும் கேசிலியன்ஸ் ஆகியவை அடங்கும். இவை முட்டைப்புழு பருவத்தில் நீரில் இருக்கும் பொழுது அதற்கு ஏற்றார்போல். சுவாசிக்கும். பின்னர் முழு வளர்ச்சி அடைந்த உடன் நிலத்தில் நுரையீரலின் மூலம் சுவாசிக்கும் திறன் பெற்று இருப்பதால் மற்ற வகை விலங்குகளில் இருந்து வேறுபடுகின்றன . டுவாரா என்னும் நியூசிலாந்தை சேர்ந்த பல்லி போன்ற பிராணி, டைனோசர் காலத்தை சேர்ந்தது .அது போல் மட்ஸ்கிப்பர்கள் தங்களது முன் பக்கத் துடுப்புகளை மென்மையான வழுக்கும் சேற்றில் நடக்க கால்களாய்ப் பயன்படுத்துகின்றன. விளாக்கள்: 1. கேசிலியன்ஸ் மூட்டைப்புழு பருவத்தில் எங்கு இருக்கும் ? 2. நிறத்தையும் வடிவத்தையும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் 3.டுவாரா என்பது என்ன? எந்த நாட்டைச் சார்ந்தது ? 4.முன்பக்க துடுப்புகளை கால்களாக பயன்படுத்துவது கொள்பவை எவை? எவை? 5. எந்த உயிரினங்கள் டைனோசர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருகின்றன?​

Answers

Answered by nkpssaumy875
1

Answer:

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.

வையகம் என்பதன் பொருள்

அ) ஊர்

ஆ) வயல்

இ) உலகம்

ஈ) கிராமம்

Answer:

இ) உலகம்

Question 2.

நலனெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

அ) நலன் + எல்லாம்

ஆ) நல + னெல்லாம்

இ) நலன் + னெல்லாம்

ஈ) நலம் + எல்லாம்

Answer:

அ) நலன் + எல்லாம்

Question 3.

நிறைந்தறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

அ) நிறைந்து + அறம்

ஆ) நிறைந்த + அறம்

இ) நிறை + அறம்

ஈ) நிறை + தறம்

Answer:

அ) நிறைந்து + அறம்

Question 4.

‘இன்பம்’ – இச்சொல்லுக்குரிய எதிர்சொல் ……………

அ) மகிழ்ச்சி

ஆ) களிப்பு

இ) கவலை

ஈ) துன்பம்

Answer:

ஈ) துன்பம்

ஆ. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக

………………….,  …………………………

………………….,  ………………………..

Answer:

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

………………….,  …………………………

………………….,  ………………………..

Answer:

ஈ. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

………………….,  …………………………

………………….,  ………………………..

Answer:

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.

அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் எது?

Answer:

அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில்.

Question 2.

உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

Answer:

(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.

(ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

Question 3.

பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?

Answer:

பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவு பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்க வேண்டுமென கவிஞர் கூறுகிறார்.

ஊ. சிந்தனை வினா.

‘உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்’. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

Answer:

உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நாம் உணவின்றிதான் வாழ வேண்டும். உழவர்கள், பயிர்களை விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமைகிறது. எனவே, உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

கற்பவை கற்றபின்

Question 1.

உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து போற்றுக.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.

பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 3.

பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக.

எதுகை நயம் :

பொங்குக – எங்கணும்

உணவு – பணம்

உழவு – பழகு

தங்கம் – இங்கிதன்

உழவே – உழவை

ஏழையும் – வாழிய

மோனை நயம் :

பொங்குக – புதுவனம்

எங்கணும் – ஏர்த்தொழில்

உணவு – உயிரோ

பணமும் – பயிர்கள்

உழவும் – உடையும்

தங்கம் – தானியம்

இயைபு :

பொங்குகவே – தங்குகவே

உணவுதரும் – அணியவரும்

உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்

Question 4.

உழவு நடக்கும் இடத்திற்குச் சென்று, செய்தி திரட்டுக.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.

விழலாகும் என்பதன் பொருள்

அ) வீணாகும்

ஆ) எங்கும்

இ) பெருமை

ஈ) மகிழ்ந்து

Answer:

அ) வீணாகும்

Question 2.

நாமக்கல் வெ. இராமலிங்கனார் ………….. என்றும் போற்றப்படுகிறார்.

அ) தேசிய கவி

ஆ) காந்தியக் கவிஞர்

இ) உவமைக் கவிஞர்

ஈ) புரட்சிக் கவிஞர்

Answer:

ஆ) காந்தியக் கவிஞர்

Question 3.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ……………

அ) பாரதிதாசன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இ) கண்ண தாசன்

ஈ) நாமக்கல் வெ. இராமலிங்கனார்

Answer:

ஈ) நாமக்கல் வெ.இராமலிங்கனார்

பாடல் பொருள்

உழவுத்தொழிலின் மேன்மையை இப்பாடல் விளக்குகின்றது. உழவின் சிறப்பால் பொங்குகின்ற பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் எனக் கூறுகின்றது. எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற தொழில் ஏர்த்தொழிலே. உணவுப்பொருள்கள் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது. பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும். மற்ற தொழில்களைக் கற்றுக்கொண்டாலும், பயிர்த்தொழில் இல்லையெனில் எல்லாம் வீணாகும். தங்கம், வெள்ளி போன்றவற்றை நாம் உண்ண முடியாது. உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமையும். இன்பத்தைத் தருவதும் உழவுத்தொழிலே ஆகும். பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.

நூல் குறிப்பு

உழவுப் பொங்கலின் சிறப்பை விளக்கும் இப்பாடலை இயற்றியவர், நாமக்கல் வெ. இராமலிங்கனார். அவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து இப்பாடல் எடுத்தாளப் பெற்றுள்ளது. இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காந்தியக் கவிஞர் என்றும் போற்றப்படுகிறார். இவருடைய ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்னும் பாடல் வரி மிகவும் புகழ்பெற்றதாகும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ என்றும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை. இவர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

Similar questions