English, asked by vetheeschnimaya, 2 months ago

தேணிலே ஊரிய செந்தமிளின் கவிதையில் வந்த
பிழைகணாத் திருத்தி எழுதுக.​

Answers

Answered by anitakeshari349
4

Answer:

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்

உருவெ டுப்பது கவிதை;

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்து ரைப்பது கவிதை.

இலக்கிய பஞ்சகம்

114 வள்ளுவர் தந்த திருமைறையைத் - தமிழ்

மாதின் இனிய உயிர் நிலையை

உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்

உத்தம ராகி ஒழுகுவமே.

பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்

பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை

நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்

நன்னயம் முற்றுந் தெளிகுவமே,

116 தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே.

கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இன்பக்

கற்பனை சேருங் களஞ்சியத்தை

முற்ற அளந்து தெரிவோமே - காதல்

மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே.

பண்டை இயற்கை வளங்களெல்லாம் - பத்துப்

பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து,

மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ்

வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.

Similar questions