Physics, asked by murugan93619268, 2 months ago

மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?​

Answers

Answered by sushamaray
0

Answer:

மின்னூட்டம் (electric charge) என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் என இருவகை மின்னூட்டங்கள் உள்ளன. அணுக்கருவில் உள்ள புரோட்டான்கள்நேர்மின்னுட்டம் (+) கொண்டவை. அணுக்கருவைச் சுற்றி வரும் எலக்ட்ரான்கள் (-) எதிர்மின்னூட்டம் கொண்டவை. நேர் மின்னேற்றங்களை நேர் ஏற்றம் என்றும் எதிர்மின்னேற்றங்களை எதிர் ஏற்றங்கள் என்றும் சுருக்கமாக அழைக்கலாம்.

நேர் ஏற்றத்திற்கும் எதிர் ஏற்றத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் மின் புல விசைக்கோடுகள் நேர் ஏற்றத்தில் தொடங்கி எதிர் ஏற்றத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. மின்புலம் அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு.

மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் (அ): இரு நேர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விலகு விசையைக் காட்டுகின்றது. படம் (ஆ): இரு எதிர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் (இ): எதிர் இயல்பு மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் ஈர்ப்புவிசையைக் காட்டுகின்றது

நேர்மின்னேற்றங்களும் எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆனால் இரண்டு நேர்மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்; அதே போன்று இரண்டு எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று தள்ளும். இதன் அடிப்படையில் ஒத்த வகையான ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் ஒவ்வாத ஏற்றங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். இந்த ஈர்ப்பு மற்றும் விலகும் பண்பை கூலும் விசை விவரிக்கின்றது. கூலும் என்பது மின்னூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த பிரான்சிய அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: சார்லசு அகசிட்டின் டெ கூலாம்)

அணுக்கருவில் ஏற்றம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு இதற்கு நொதுமி என்று பெயர். நொது என்னும் சொல் எப்பக்கமும் சேராப் பொது என்று பொருள் படும். ஏற்றம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின் விசைக்கு உட்படாது. மின்னூட்டம் உடைய ஒரு பொருளானது மின்னூட்டம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்

Similar questions