India Languages, asked by dineshduraibabu2002, 1 day ago

வினையெச்சம், வினைத்தொகை பயின்று வரும் சொற்கள்​

Answers

Answered by Jellyfish143
2

வினையெச்சம்

முற்றுப்பெறாத viனை,

வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.

பாடி மகிழ்ந்தனர் - "பாடி" என்னும்

எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும்

வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

வினைத்தொகை

காலம் காட்டும் இடைநிலையும்

பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை

எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

எ.கா:வீசுதென்றல், கொல்களிறு

வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள்.இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின.

மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று வீசும் காற்று எனவும் கொன்றகளிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில்

தொக்கி இருக்கின்றன. வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.

Answered by nitishkumarjg8a
0

Answer:

Gk for women latest the day and happiness of life and tabular coloum and tabular

Similar questions