உன் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிக் கடிதம் எழுதுக ...
Answers
அன்பே (நண்பர்_பெயர்), எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பெற்றோருக்கு எப்படி? உங்கள் பிறந்தநாளை விரும்பி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைப் போன்ற ஒரு உதவி மற்றும் அன்பான நண்பரைப் பெற்றதில் பெருமைப்படுகிறேன். உங்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் உறவை என்றென்றும் வைத்திருக்க விரும்புவது மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் ஒரு பெரிய வெற்றியை விரும்புகிறேன். கடவுள் செய்யட்டும் அன்பான நண்பர்கள், அக்கறையுள்ள பெற்றோர்கள், ஆதரவான சூழல், நல்ல ஆரோக்கியம் மற்றும் உங்கள் கல்வியில் வெற்றிபெற உங்களுக்கு உதவுங்கள். உங்களுக்கு மிகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் உங்களை சந்திக்க எதிர்பார்க்கிறேன் விரைவில். அன்பு மற்றும் கவனிப்புடன், (உங்கள்_பெயர்)
அன்பு தோழிக்கு,
நலம். நலம் அறிய ஆவல். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும். நான் இந்த தருணத்தில் உன்னோடு இல்லாதிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது. பள்ளி தேர்வுகள் நடப்பதால் உன்னை காண இயலவில்லை. ஆதலால் இந்த கடிதத்தில் வாழ்த்த வேண்டியதாகிவிட்டது. அங்கு அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிரேன். என் அம்மா அப்பா கூட உன்னை வாழ்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆதலால் அவர்கள் சார்பகவும் உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். உன் முந்தய பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடினோம் என்பது இன்னும் என் மனதில் நீங்கா நினைவுகளாக உள்ளன. நான் அருகில் இல்லை என்று வருந்தாதே. நன்றாக படி. நீ நன்றாக படித்து உன் ஆசைப் படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதுவே என் விருப்பமும் கூட. தேர்வுகள் முடிந்தவுடன் உன் வீட்டுக்கு வருகிறேன். கடிதத்துடன் பிறந்த நாள் பரிசையும் இணைத்துள்ளேன். பிரித்து பார்த்துவிட்டு பதில் எழுதவும்.
இப்படிக்கு,
உன் அன்பு தோழன்,
யுகபாரதி.