சுற்றுப்புற சூழ்நிலைப் பற்றி கட்டுலை ஒன்று எழுதுக.
Answers
Answer:சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் (Biophysical environment) என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.[1] உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.[2] ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக் கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை அறியலாம்.
சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்.
Answer:
சுற்றுச்சூழலியல் என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் அறிவியல் ஆகும். இந்தக் கற்கையின் ஒரு பகுதியானது, சூழலில் மனிதர்களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது. சூழலியல் என்பது சுற்றுச் சூழலியலினதும், உயிரியலினதும் ஒரு பகுதியாகும்.