India Languages, asked by sheelaelango02, 1 month ago

அழகரின்
கிள்ளை விடுதூது வழிநின்று விவரிக்க​

Answers

Answered by senthilchellam1982
2

Answer:

நூல் வரலாறுதொகு

திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது. காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் கொண்ட நூல் இது. இந்நூலை இயற்றியவர் சொக்கநாதப் புலவர். இவர் மதுரை நகரைச் சார்ந்தவர். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. பலபட்டடைக் கணக்கு எழுதும் தொழில் செய்யும் மரபில் வந்ததால் இப்பெயர் பெற்றார். மதுரை மும்மணிக்கோவை, யமக அந்தாதி, தென்றல் விடு தூது, கன்னிவாடி நரசிங்கர் மேல் பாடிய வளமடல், தேவை உலா முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

நூல் அமைப்புதொகு

அழகர் மலைக்கு திருமாலிருஞ்சோலை, இடபகிரி, தென்திருப்பதி, சஞ்சீவி பர்வதம், பழமுதிர்சோலை எனப் பல பெயர்கள் உண்டு. கிள்ளை விடு தூதில் அழகர் மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அழகர் மலைக் கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் கூற கிளியைத்தூது அனுப்புவதாக அமைகிறது நூல். நூலின் முதலில் கிளியின் பெருமைகள் சொல்லப்படுகிறது. அடுத்து கோடைத் திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமானிடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாறும் சொல்லப்படுகின்றன. இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கிவருமாறு கிளியிடம் கூறுவதாக நூல் அமைகிறது. சாமி கவிகாளருத்திரர் பாடிய பிள்ளைத்தமிழ், கவிகுஞ்சர பாரதியாரின் அழகர் குறவஞ்சி முதலிய சிற்றிலக்கியங்களிலும் இம்மலையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

Similar questions