Art, asked by sb914102, 1 day ago

தண்ணீர் துணைப்பாடக்கட்டுரை​

Answers

Answered by akshanshtiwari12345
0

Answer:

don't know this language

Answered by karthiksrivi1982
1

தண்ணீர் ஒரு சிந்தனை – கட்டுரை

நீரினில் உயிர்கள் வாழும் , நீரின்றி உயிர்கள் வாழ்தல் அரிது என்பதால் தான் உலகைப் படைத்த இறைவன் பெரும்பகுதி நீராகவும் , எஞ்சிய பகுதியை நிலமாகவும் படைத்தான்.

வரலாற்றுச் சுவடுகளை நாம் புரட்டிப்பார்த்தால் மன்னர்கள் ஆண்ட காலத்தில்கூட தினமும் மன்னன் அமைச்சர்களை நோக்கி கேட்கும் முதல் கேள்வியாக “மாதம் மும்மாரி பொழிகின்றதா? மக்கள் நலமுடன் வாழ்கின்றர்களா?” என்றே கேட்டதாக அறிகின்றோம் .

இதிலிருந்து “மாரி” என்னும் மழை எந்த அளவுக்கு மக்கள் வாழ்வதற்கு

முக்கியம் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இன்றைய நிலை என்ன ?

இன்றோ நாட்டின் பெரும்பகுதியில் தண்ணீர் இன்றி மக்கள் தவியாய் தவிக்கும் நிலை ..

தண்ணீருக்காக ஒரே தேசத்தின் அண்டை மாநிலங்களுக்குள் ஒற்றுமை குலைந்து சகோதர மனப்பான்மையுடன்

வாழ்ந்த மக்கள் ஒருவருக்கு எதிராக

மற்றவர் போராட்டம் என்ற போர்க்கொடி உயர்த்தி கலவரங்கள் உருவாகும் நிலை..

ஆண்டவன் அனைவருக்கும்

பொதுவாய் படைத்த ஆறுகள் நாட்டு மக்கள்

வாழ்வை வளமாக்குவதற்கு பதிலாக

நாட்டு மக்கள்சண்டைக்கும் சச்சரவுக்கும்

காரணமாகி இருக்கும் அவலநிலை.

இதற்க்கெல்லாம் பருவமழை பொய்த்து விட்டது , ஆறு வற்றி விட்டது , ஏரி வறண்டு விட்டது ..என்று ஒரு வரியில் பதில் கூறிவிட முடியுமா? முடியாது .

ஏன் என்றால்…

உலகத்தின் படைப்பின் சுழற்சியை நாம் சரியாக புரிந்து கொள்ளாததால் வந்த வினையைத்தான் நாம் தற்பொழுது அறுவடை செய்து வருகிறோம்.

படைப்பின் சுழற்சி

படைப்பின் சுழற்சி என்றால் என்ன?

இன்றைய அவலநிலைக்கு அது எப்படி காரணமாகும்? இந்த நிலையினை மாற்றியமைக்கும் வழி என்ன? .. என்ற மூன்று கேள்விகளுக்கும் நாம் விடைகாண

முயன்றால் நம் எதிர்காலம் வறண்ட பூமியைப் பார்த்து மிரண்டு போகும் காலமாக இல்லாமல் பசுமை நிறைந்த வயல்களைக் கண்டு குதூகலிக்கும் சொர்க்கபூமியாய்

மாறும் என்பதில் ஐயமில்லை!

புவி திரண்ட தண்ணீர் ஆதவனின் வெப்பத்தால் ஆவியாகி , வான் அடைந்து , மேகங்களாய் திரண்டு , காற்றினில் குளிர்ந்து பெருமழையாய் பூமிக்கே திரும்ப கிடைத்தலே படைப்பின் சுழற்சி…ஆனால் அவ்வாறு பொழிகின்ற மழை நீரை பூமி உள்வாங்கி

தேக்கினால் அன்றோ நீர்வளம் பூமியில்

நிலைத்து நிற்கும் ?

எதிர்கொள்ளும் அபாயம் .

மக்கள் தொகை பெருக்கத்தால் நீரின் தேவை

நாளுக்குநாள் பெருகிக்கொண்டே செல்வதால் , நிலத்தடி நீரினை பெருமளவில் நாம் உறிஞ்சி எடுத்து வருவதால் கடல்நீர் உட்புகுந்து நல்ல நீரை உபயோகிக்க இயலாதவண்ணம் செய்யும் அபாயம் தொடர்கிறது … என்று நீர்வள அறிவியல்

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர் …எனவே வருங்காலத்தில் குடிக்க நீரின்றி மக்கள் தவித்து மாளும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.!

மீளும் வழி யாது?

“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்” என்னும் வள்ளுவப்

பெருந்தகையின் வாக்கினை நினைவில் கொண்டு

நாம் இனி வரும் காலத்தில் நிலத்தடி நீரை

பாதுகாக்கும் முயற்சியில் இறங்காவிடில் நம்

எதிர்காலம் கேள்விக்குறியாய் மாறும் என்பதில்

சிறிதளவும் சந்தேகமில்லை .. தற்போது அரசாங்கமும்

தண்ணீர் பஞ்சத்தை போக்கிட மழை நீர் சேமிப்பு

வழிமுறைகளை அறிவித்துள்ளது.. இதுவரை

பெய்த மழைநீரை சரியாக சேமிக்காமல் கடல்

நீரில் கலந்திட செய்து வீணாக்கிய காரணத்தால்

ஏற்பட்ட இந்த அவல நிலையை இனி மழைநீர்

சேமிப்பு முறைகளை பின்பற்றி நிலத்தடி நீரின்

வளத்தை பெருக்குவதன் மூலம் நாம் சரி செய்ய

முடியும். “வான் நோக்கி வாழும் உலகு” என்றானே

வள்ளுவன் அதன் உண்மை நிலை உணர்ந்து

வான் தரும் கொடையாம் மழையை , மழைநீரை

சிறப்பாக தேக்கி , பாதுகாத்து வாழ்வோமேயானால்

நீரின்றி கண்ணீரோடு வாழும் நிலை மாறிவிடும்

என்பது திண்ணம்!

“இருபுனலும் வாய்ந்த மழையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு ” என்ற வள்ளுவன்

இருபுனல் எனும் வாக்கில் மேல்நீர் எனப்படும் மழையும்

கீழ்நீர் எனப்படும் நிலத்தடி நீரையும் குறித்துள்ளமை

நோக்கி நிலத்தடி நீர்வளம் பெருக்கி மழைநீர் சேமிப்பு

முறைகளை கடைப்பிடித்து செயலாற்றி நாட்டில்

உயர்வோம்!..நலமான வளமான எதிர்காலம் காண்போம்.

Similar questions