India Languages, asked by Nafeeza25, 2 months ago

சோலைக் ( பூங்கா )  காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஒரு உரையாடல் அமைக்க .​

Answers

Answered by anushree92004
62

Answer:

1) சோலைக் காற்று : அடர்ந்த மரங்கள், நீர் நிறைந்த பூங்காக்கள் , செடிகள் கொடிகள் நிறைந்த குளிர்ச்சியான இடமே எனது இடம் ஆகும்.

மின்விசிறி காற்று ; நான்கு சுவர்கள் அடங்கிய அறையே எனது இருப்பிடம் ஆகும் .

2) சோலைக் காற்று : நான் எப்போதும் குளிர்ச்சி நிறைந்த காற்றையே வீசிக் கொண்டிருக்கிறேன்.

மின்விசிறி காற்று : நான் எப்போதும் வெதுவெதுப்பான சூடான காற்றையே வீசிக் கொண்டிருக்கிறேன்.

3) சோலைக் காற்று : மக்கள் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக தூய காற்றைப் பெற என் இருப்பிடம் தேடி வருகின்றனர் .

மின்விசிறிக் காற்று : வீட்டில் இருப்பவர்கள், பணி செய்பவர்கள் என் இருப்பிடம் தேடி வந்து காற்றைப் பெறுகிறார்கள்.

4) சோலைக் காற்று : சிறுவர்கள் மாலை நேரங்களில் விளையாடுவதற்காகவும் காதலர்கள் பொழுதுபோக்கவும் நான் பயன்படுகிறேன்.

மின்விசிறிக் காற்று : எல்லா நேரங்களிலும் மனிதர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நான் காற்று தந்து உதவுகிறேன்.

5) சோலைக் காற்று :மின்சாரம் இல்லாத நேரங்களில் கூட நான் குளிர்ச்சியான காற்றை வீசிக்கொண்டு இருக்கிறேன். எந்த நேரமும் நானும் என்னிடம் வருபவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துகிறேன்.

மின் விசிறிக் காற்று : மின்சாரம் இல்லாத நேரங்களில் என்னால் காற்று தர இயலாது. சூடான உடலோடு மனிதர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.

Answered by cjaicjenba
0

Answer:

poonga katru: hey epadi irukura

minvisiri katru: hey nalla irukuren,nee?

Similar questions