Economy, asked by santhoshsanthosh5888, 1 month ago

பகுதி வாரம் என்றால் என்ன​

Answers

Answered by lohitjinaga
1

Answer:

வாரம் என்பது பின்வரும் ஒன்றாக இருக்கலாம்:

கிழமை, 7 நாள் கொண்ட தொகுதி.[1]

ஆவாரம்பூ ஆனிரைகள் விரும்பி உண்ணாமல் மேலோட்டமாக ஒதுக்கும் பூ

ஆடுதின்னாப்பாலை என்னும் ஒரு மூலிகைத் தாவரம்.

சங்ககால நூல்களில் வாரம்

பகுப்பில் ஒரு தொகுப்பு

வாரம் என்னும் சொல் ஒரு தொகுப்புப் பகுதியை உணர்த்தும். இதனைத் தொல்காப்பியம் ‘உறழ்ச்சி வாரம்’ எனக் குறிப்பிடுகிறது. இரண்டு தமிழ்ச்சொற்கள் ஒன்று சேரும் புணர்ச்சியில் அந்தச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் வரும் புணர்ச்சிப் பாங்கை ‘உறழ்ச்சி’ என்பர்.[2]

கலிப்பா உறுப்பு

வாரம் என்பது கலிப்பாவில் தொகுத்துக் கூறும் முடிவுரைப் பாவுருப்பு. வண்ணகக் கலிப்பாவில் தரவு, தாழிசை, எண், வாரம் என்னும் உறுப்புகள் இருக்கும்.[3][4][5][6] இந்த வாரத்தைப் யாப்பருங்கலம் முதலான நூல்கள் சுரிதகம் எனக் குறிப்பிடுகின்றன.

ஒருதலைப் பேச்சு

வாரம் என்பது ஒருதலைப் பேச்சு. அவையில் நண்பரோடு சேர்ந்து அவர் பக்கமாக, ஒருதலையாகப் பேசக்கூடாது.[7]

கைமுத்திரை

வாரம் என்பது நாட்டியம் ஆடுபவல் காட்டும் கைமுத்திரைகளில் ஒன்று.[8]

பின்பாட்டு

வாரம் என்பது பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடல்[9] வாரம் என்னும் சொல் இக்காலத்தில் பங்குபோட்டுக்கொள்ளுதலை உணர்த்தும். உழவர்கள் நிலத்தில் விளையும் கண்டுமுதலை நில-உடைமையாளர்க்குப் பாதி, உழுது பயிரிடுவோருக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொள்ளுதலை வாரம் என்பர்.

Explanation:

hope it is helping...

Answered by anujayank
0

Answer:

வாரம் என்பது தினங்களின் தொகுப்பு

Similar questions