India Languages, asked by ashvanthb886, 23 days ago

தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.​

Answers

Answered by ZareenaTabassum
6

விடை:

தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்கள்:

(i) இதிகாசம்

(ii) உரைநடை

(iii) உவமை

(iv) கட்டுரை

(v) கலந்துரையாடல்

(vi) கலை

(vii) கவிதை

(viii) காப்பியம்

(ix) சிறுகதை

(x) தொடர்கதை

(xi) சொலவடை

(xii) நாடகம்

(xiii) பழமொழி

(xiv) பாட்டு

(xv) புனிதம்

(xvi) விடுகதை

  • இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்.
  • உரைநடை என்பது, ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஓர் எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல அணிகள் இன்றி, நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை, பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது.
  • ஒரு பொருளை அதைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது“உவமை” ஆகும். உவமைத் தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமைந்து வரும்.
  • கலந்துரையாடல் என்பது இருவர் அல்லது பலருக்கு இடையேயான நேரடி அல்லது பிற ஊடகக் கருத்துப் பரிமாற்றம் ஆகும். அன்றாட வாழ்விலும், நீதிமன்றம், சட்டமன்றம், ஊடகம் போன்ற முக்கிய சமூக நிறுவனங்களிலும் உரையாடல் ஒரு முக்கியக் கூறாக உள்ளது.
  • கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும்.
  • விடுகதை என்பது மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும்.

SPJ2

Similar questions