பேச்சின் தொடக்கம் எவ்வாறு அமைதல்வேண்டும்?
சிறுவினாக்கள்
பேச்சுக்கலை
Answers
Answered by
1
விடை:
பேச்சின் தொடக்கம் நன்றாய் அமையாவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் குறித்த நல்லெண்ணம் தோன்றாது. மேடைப் பேச்சின் தொடங்கும் கேட்போரை வயப்படுத்தும் முறையில் இருக்க வேண்டும். அவையோர் தம் உள்ளங்களைக் கேட்பதற்குரிய பக்குவத்தில் வைப்பது பேச்சின் தொடக்கமே.
மண்ணில் ஈரப்பதம் இருந்தால் தான் விதைக்க முடியும் அதைப் போலக் கேட்போரைத் தன் வயப்படுத்தும் முறையில் வைத்திருப்போரால் தான் தம் கருத்துகளைக் கேட்போர் நெஞ்சில் பதித்திட முடியும். அவையில் இருப்போரை விளித்துச் சுருக்கமான முன்னுரையுடன் பேசத் தொடங்குவதே சிறப்புடையது. பேசத் தொடங்கிய ஓரிரு மணித்துளிகளில் பேசப் போகும் பொருளில் புகுந்து விடுவது பாராட்டுக்குரியது; இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.
Similar questions