India Languages, asked by sujathamidhun2019, 19 days ago

சொல் என்றால் என்ன அவை வகைப்படும்?​

Answers

Answered by JSP2008
6

Explanation:

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக்கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.

  • சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி என பாகுபடுத்திப் பார்த்தது.
  • சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுவிட்டு 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.
  • மேலும் நன்னுல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு வேறு மூன்று வகையில் கண்டது.

இது உதவும் என்று நம்புகிறேன்!

Answered by ranimasala934
1

பொருளை அறிந்து கொள்வதற்குக் கருவியாக இருக்கும் ஒலியே சொல்.

அவை நான்கு வகைப்படும்

1) பெயர்ச்சொல்

2) வினைச்சொல்

3) இடைச்சொல்

4) உரிச்சொல்

Similar questions