ஒன்றல்ல இரண்டல்ல மனவரைப்படம்
Answers
நமது கலாச்சார வரலாறு, முறைப்படி தொகுக்கப்படவில்லை. தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என்று பிரிக்கிறோம். இதுவரை அறிஞர்களால் திரட்டப் பட்டு நமக்கு கிடைப்பது இயல் மட்டுமே. நாடகம் கிடைக்க வில்லை. இசை குறித்த வரலாறே நம்மிடம் இல்லை. நம்முடைய பாடப் புத்தகங்கள் கூட பாட வரையறை செய்யும் போது ‘இசைப் பகுதி நீங்கலாக’ என்று தான் குறிப்பிடுகின்றன. இசை ஒரு நிகழ்கலை. நுண்கலைகள் ஐந்து. சிற்பம், சித்திரம், கட்டிடம், நடனம், இசை. இவற்றில் முதல் மூன்று கலைகளும் பரு வடிவில் காலத்தில் நீடித்து நிற்கும். எவரும் எப்போதும் பார்க்கலாம். மற்ற இரு கலைகளும் அவை நிகழும் போது தான் அனுபவிக்க முடியும். எழுதியோ சொல்லியோ காட்ட முடியாது. (இப்போது பதிவு செய்து வைக்க ஒலி, ஒளி ஊடகங்கள் உள்ளன என்பது உண்மைதான்) ஆகவே தொடர்ச்சியான ஒரு ஓட்டம், மரபு இல்லை என்றால் இக்கலைகள் நீடிக்க முடியாது.