புதுவையில் தோன்றிய புதுமைப் பாவலர்
Answers
Answer:
புதுவையில் பூத்த புரட்சி மலர்களுள் பாரதி, பாரதிதாசனுடன் இணையாக எண்ணத்தக்கவர் புதுவை சிவம். இவர் ஒரு சீர்திருத்த, சுயமரியாதைக் கவிஞர். நோக்கம், சமயம், கொள்கை வேறுபட்டாலும் தமிழ் வளர்த்த சிற்பி என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளமுடியாது.
புதுவை சிவம் என்று அறியப்பட்ட ச.சிவப்பிரகாசம் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி, புதுச்சேரி பகுதிகளில் ஒன்றான முத்தியாலுப்பேட்டையில் பிறந்தார். சண்முக வேலாயுதம்-விசாலாட்சி அம்மையாருக்குப் பிறந்த இரு புதல்வர்களில் மூத்தவர் சிவப்பிரகாசம்.
புதுவை பிரெஞ்சுப் பகுதியான முத்தியாலுப்பேட்டையில் புதுவை அரசின் காவல் அதிகாரியாகப் பணியாற்றியவர், அவர் பாட்டனார் தளவாய் வேங்கடாசல நாயக்கர். அவர் பெயரால் தெரு ஒன்றே இருந்தது. அவர்களின் முன்னோர் உடையார் பாளையம் ஜமீன் பரம்பரையினர். இவர்கள் காலப்போக்கில் புதுச்சேரிக்குக் குடியேறியவர்கள் என்று கவிஞர் புதுவை சிவம் தன் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Answer:
பாரதியார் புதுவையில் இருந்த காலத்தில் அவன் உள்ளம் தத்துவ ஆய்வுகளிலும், ஞானத் தேடல்களிலும் முழுகி முழுகி எழுந்தது.
Explanation:
- இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். பொருளுக்காக ஆட்களைப் பாடுவோரும், பொழுது போக்கிற்காக இயற்கையைப் பாடுவோரும், போலிப் புகழுக்காக எதையும் பாடுவோரும் மலிந்திருந்த கவிதை உலகில், கொள்கையைப் பாடுவோராகவும், மக்கள் நலவாழ்வைப் பாடுவோராகவும் சமுதாய மலர்ச்சியைப் பாடுவோராகவும் விளங்கியவர் பாவேந்தர். பாவேந்தரின் படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம் பெறத்தக்க பெருமை உடையவை. இயற்கையைப் பாடி இறவாப் புகழ்பெற்ற கீட்சு, செல்லி போன்ற ஆங்கிலக் கவிஞர்கட்கு இணையானவர் என்பதைக் காட்டிலும், இயற்கையின் அழகுக் கூறுகளைப் பாடும்போதும் மக்கள் நலனையே மனதில் கொண்டு பாடும் பாங்கால் அவர்களினும் பாவேந்தர் உயர்ந்து காணப்படுகின்றார். பாவேந்தர் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச் சென்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞர். இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் பாவேந்தர்.
பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்பு
- பாவேந்தர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.15 மணி அளவில் புதுச்சேரியில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப சுப்புரத்தினம் இளமையிலேயே கவி இயற்றும் திறம்பெற்றுத் திகழ்ந்தார்.
- 1899 - பாவேந்தர், ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
- 1907 - புதுவை மகாவித்வான் ஆ. பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். புதுவை மாநிலக் கல்வே கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார்.
- 1908 - பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன. பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
- 1909 - இவர் தன் பதினெட்டாம் வயதில் காரைக்காலைச் சேர்ந்த நிரவி எனும் ஊரில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி ஏற்றார். பாவேந்தர் தன் கற்பனைத் திறத்தாலே தமிழ் உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் புதுவை கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன் கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார்.
- 1920 - பழனி அம்மாளை இல்லறத் துணைவியாக ஏற்றார். இவர்கள் சரசுவதி, கோபதி, வசந்தா, ரமணி எனும் மக்களைப் பெற்றெடுத்தார்கள். கோபதி தான் இன்று மன்னர் மன்னனாக உலா வருகின்ற பெருங்கவிஞர்.
- தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் கைத்தறித் துணிகளைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன், புதுவைமுரசு, துய்ப்ளேக்ஸ், முல்லை, குயில் ஆகிய இதழ்களுக்குப் பாவேந்தர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
- 1929 - பெரியார் ஈ.வெ.ராவின் சுயமரியாதைக் கருத்துகள் பாவேந்தரைக் கவர்ந்தன. அதன் மூலம் பெரியாருடன் தொடர்பு கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்று பெரியார் இவரைப் பாராட்டினார். இவர் அப்போது அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற திராவிட இயக்கத்தினரிடம் நட்புக் கொண்டிருந்தார். திராவிட மேடைகள் தோறும் கவிஞரின் கவிதை வரிகள் பாடப்பட்டன. அப்போதுதான் புலவர் மத்தியிலே உலாவந்து கொண்டிருந்த கவிஞர், மக்கள் மத்தியில் உலாவரத் தொடங்கினார். மக்கள் கவிஞராக விளங்கினார்.
- 1950 - பொன்னுச்சாமிப் பிள்ளை முயற்சியால் பாவேந்தருக்கு மணிவிழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தி ரூ.1000 நிதியும் அளிக்கப்பட்டது.
- 1954 - புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்றத்திற்குத் தலைமை வகித்தார்.
- 1962 - தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கிப் பாராட்டினார். பாண்டியன் பரிசு நூலை திரைப்படமாக்க முயன்றார் கவிஞர். அது நடைபெறவில்லை. பின்னர் பாரதியார் வாழ்க்கை வரலாற்றினைத் திரைப்படமாக்க எண்ணினார். அப்படத்தில் தாமே பாரதியாராகவும் நடிக்க இருந்தார். அதுவும் நடைபெறவில்லை. திரைப்படங்களை உருவாக்க ஓயாது உழைத்த கவிஞரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- 1964 - ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்றார் பாவேந்தர். அதன் பின்னர் சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர், அழகின் சிரிப்பு, பாடிவந்த நிலா. 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார். 22.4.1964ல் அவரது உடல் புதுவை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- 1965 - புதுவையில் கவிஞரின் நினைவு மண்டபம் புதுவை நகரசபையால் கட்டப்பட்டது.
- 1968 - சனவரியில் சென்னையில் நடைபெற்ற 2-வது உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் கவிஞருக்குச் சிலை எழுப்பப்பட்டது.
- 1972 - ஏப்ரல் 29-ல் புதுவை பூங்காவில் புதுவை அரசின் சார்பில் கவிஞருக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டது. பாரதிதாசன் புதுவையில் வாழ்ந்த வீட்டைப் புதுவை அரசு விலைக்கு வாங்கியது. அங்கு கவிஞரின் நினைவு நூலகம் செயல்பட்டு வருகின்றது. பாவேந்தர் பயன்படுத்திய பொருட்கள் மக்களின் பார்வைக்கு ஆங்கே வைக்கப்பட்டது.
- 1982 - திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.