India Languages, asked by kmageshwari10, 1 month ago

மூவகை மொழியைச் சான்றுடன் விளக்குக.​

Answers

Answered by krishnanchitra21
3

Explanation:

மூவகைப்படும். அவையாவன

தனிமொழி

தொடர்மொழி

பொதுமொழி

தனிமொழி தொகு

ஒருசொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.

எ.கா: வா, கண், செய்தான்

தொடர்மொழிஎழுத்துக்களின் தொகை‌யாவை தொகு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.

எ.கா: படம் பார்த்தான்.

பொதுமொழி தொகு

ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி எனப்படும்.

எ.கா: அந்தமான், பலகை, வைகை

‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.

Answered by sanjunaveen846
5

Answer:

•தனிமொழி

•தொடர்மொழி

•பொது மொழி

தனிமொழி

தனித்து நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி.

எ.கா: மனிதன், நிலம்

தொடர்மொழி

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து நின்று இரண்டு முதலிய பல பொருள்கள் தருவது தொடர்மொழி.

எ.கா: நிலங்கடந்தான், சாலச்சிறந்தது

பொதுமொழி

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதே சொல் தொடர்ந்து நின்று பல பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழியாகும்.

எ.கா: தாமரை (தா + மரை – தாவுகின்ற மான்), எட்டு (எள் + து – எள்ளை உண்)

Explanation:

ஓர் எழுத்து, தனியாகவோ பல எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும். பதம், மொழி, கிளவி என்பன ஒருபொருள் தரும் பலசொற்கள்.

Similar questions