India Languages, asked by kmageshwari10, 1 month ago

தொழிற்பெயரை வகையுடன் விளக்குக.​

Answers

Answered by debpompi55
2

Answer:

தொழிற்பெயரை வகையுடன் விளக்குக.

Answered by vasanthyrajahmuniapp
3

Explanation:

தொழிற்பெயர் :

ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண் , இடம் ,காலம் ,பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும். எடுத்துக்காட்டு : நடத்தல்

விகுதி பெற்ற தொழிற்பெயர் :

வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.

ஒரே வினையடி பல விதிகளையும் ஏற்கும் .

எடுத்துக்காட்டு : நட என்பது வினையடி

நடை ,நடத்தை, நடத்தல்.

எதிர்மறை தொழிற்பெயர் :

எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும் .

எடுத்துக்காட்டு : நடவாமை , கொல்லாமை.

முதனிலைத் தொழிற்பெயர் :

விகுதி பெறாமல் வினைப் பகுதியே

தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.

எடுத்துக்காட்டு :தட்டு, உரை, அடி.

இச் சொற்கள் முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள் படும் போது தொழிற்பெயர்களாகின்றன.

முதனிலை திரிந்த தொழிற்பெயர் :

விகுதி பெறாமல் முதனிலைத் திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும் .

எடுத்துக்காட்டு :பேறு.

Similar questions