இத்துடன் நீங்கள், உங்கள் வீட்டில் எவ்வாறு பாதுகாப்பாக உள்ளீர்கள் என்பதை கடிதமாக எழுதி அனுப்பவும்.
Answers
Answer:
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
Explanation:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கொரோனா நெருக்கடியை பிரதமர் கையாளும்விதம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"ஏமாற்றமடைந்த ஒரு குடிமகன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். மார்ச் 23ஆம் தேதி எழுதிய என்னுடைய முதல் கடிதத்தில் நம் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், பலவீனமானவர்களைக் கைவிட்டுவிட வேண்டாமெனக் கோரியிருந்தேன். ஆனால், அடுத்த நாளே மிகக் கடுமையான, உடனடியான ஊரடங்கு உத்தரவை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்ததுபோலவே அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்ட என் தலைவர் என உங்களை நம்பியிருந்த எனக்கு இது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும் உங்களை நம்பினேன். அனால், அது தவறு எனப் புரிந்தது. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பதை காலம் நிரூபித்தது.
இப்போதும் நீங்கள்தான் எங்கள் தலைவர். இந்தக் கடினமான காலகட்டத்தில் நீங்கள் சொல்வதைத்தான் 140 கோடி இந்தியர்களும் கேட்கப்போகிறோம். இன்றைக்கு உலகில் உங்களுக்கு இருப்பதுபோல இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு வேறு யாருக்கும் கிடையாது. நீங்கள் சொன்னால் அவர்கள் செய்கிறார்கள். இன்று இந்த தேசம் கடினமான நிலைமையை உணர்ந்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக நீங்கள் கைதட்ட உத்தரவிட்டபோது, உங்கள் எதிராளிகள்கூட கைதட்டினார்கள். ஆனால், நீங்கள் சொல்வதைச் செய்கிறோம் என்பதால், உங்களுக்கு அடிபணிந்து செல்வதாக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது. என் மக்களின் தலைவர் என்ற முறையில் நீங்கள் நடந்துகொள்ளும் முறையைக் கேள்விகேட்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடந்த அதே தவறு மிகப் பெரிய முறையில் மீண்டும் நடப்பதாக எனக்கு அச்சம் இருக்கிறது. பணமதிப்பழப்பு நடவடிக்கையால் பலர் தங்களுடைய சேமிப்பை இழந்தார்கள். ஏழைகள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். தவறான முறையில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ஊரடங்கு, வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கப்போகிறது. ஏழைகளுக்கு உங்களைவிட்டால் வேறு யாரும் இல்லை. ஒரு பக்கம், வசதியுள்ளவர்களை விளக்குகளை ஏற்றி, பிரமாதமான காட்சியை உருவாக்கச் சொல்கிறீர்கள். ஆனால், ஏழைகளின் வாழ்வே ஒரு வெட்கப்படத்தக்க காட்சியாக இருக்கிறது.