சேக்கிழார் - குறிப்பு வரைக.
சிறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
Answered by
31
விடை:
சேக்கிழார் :
பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார். இவர், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர். இவர், அநபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர். இவர், உத்தமச் சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர் சீர் பரவுவார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
விளக்கம்:
சேக்கிழார் வரலாறு, இப்போதுள்ள பெரிய புராணப் பதிப்புகளின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள 'திருத்தொண்டர் புராண வரலாறு' அல்லது சேக்கிழார் புராணம் என்பதில் காணப்படுகிறது. இதுவே சேக்கிழார் வரலாற்றைக் கூற வந்த முதல் நூலாகும். இதனிற் கூறப்படும் சேக்கிழார் வரலாறு இதுவாகும்.
Answered by
1
it is the answer for you for this question
Attachments:
Similar questions