வல்லினம் வருமா? பழகு- தமிழ், எலி - கடிக்கும் ,கார்- காலம்
Answers
Answer:
III. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
அ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (சரி)
காரணம்:- “அண்ணாமலை என்னும் பெயரை அடுத்து” வல்லினம் இடுதல் கூடாது. “இருபெயரொட்டுப் பண்புத் தொகையில்” வல்லினம் மிகும்.
எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுவதும் சரியே
ஆ) அத்தனைச் சிறிய (தவறு)
அத்தனை சிறிய என்பதுதான் சரி
காரணம்:- “அத்தனை என்ற சொல்லின் பின்” வல்லினம் இடுதல் கூடாது.
இ) ஆத்திச்சூடி (சரி)
காரணம்:- “அத்தி – அகர ஈறு, இகர ஈறு புணரும் போது” வல்லினம் மிகும்.
ஈ) எடுத்துக்காட்டுகள் (சரி)
காரணம்:- “வன்தொடர் குற்றியலுகரத்தில்” பின் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.
உ) கீழ்பக்கம் (தவறு)
கீழ்ப்பக்கம் என்பது தான் சரி
காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.
ஊ) சான்றோர் பேரவை (சரி)
காரணம்:- “நிலை மொழியில் உயர்திணை வரும்போது” வல்லினம் இடுதல் கூடாது.
ஒ) சென்னைப் பல்கலைக்கழகம் (சரி)
காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.
ஓ) தயிர்ச்சோறு (சரி)
காரணம்:- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் இடுதல் வேண்டும்.
IV. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
அ) வங்கி கடன் (வல்லினம் மிகும்) – வங்கிக்கடன்
காரணம்:- “இகர ஈற்றில்” வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்)
ஆ) பழங்களை பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) – பழங்களைப் பறிக்காதீர்கள்
Explanation:
I. வல்லினம் வருமா?
அ) தோழி __ கூற்று : நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது.
ஆ) பெரிய __தம்பி : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
இ) சிறிய __ பறவை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஈ) பழகு __தமிழ் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
உ) இது __கேள் : இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
ஊ) எலி __ கடிக்கும் : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
எ) ஓடிய __ குதிரை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஏ) தரும்படி __ சொன்னார் : “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
ஐ) வாழ்க __ தலைவர் : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
ஒ) கார் __ காலம் : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.
II. வல்லினம் இடலாமா?
அ) வாழ்த்து __கள்
“கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
ஆ) எழுத்து__ கள்
“கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
இ) திருநிறை __ செல்வன்
“திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.
ஈ) திருவளர் __ செல்வி