விண்வெளியும் கல்பளா சாவ்லரவும் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக:-
Answers
Answer:
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
குறிப்புச் சட்டகம் :
* முன்னுரை
* இளமையும் கல்வியும்
*முதல் விண்வெளிப்பயணம்
* இறுதிப் பயணம்
*விருதுகளும் அங்கீகாரங்களும்
*முடிவுரை
முன்னுரை :
இந்தியாவின் முதன் முதலில் விண்வெளியில் கால்பதித்தவர் என்ற பெருமையை உடையவர். இளம் விஞ்ஞானியான கல்பனா சாவ்லா பற்றி இக்கட்டுரையில் தெளிவாக காண்போம் .
பிறப்பு :
மாநிலம் - ஹரியானா
ஊர் - கர்னல்
ஆண்டு : 1.07.1961
பெற்றோர் : பனாரஸ் லால்சாவ்லா , சன்யோகிதா தேவி
சகோதரிகள் : சுனிதா, தீபா
சகோதரன் : சஞ்சய்
இளமையும் கல்வியும் :
* தொடக்கக் கல்வியை கர்னல் அரசுப் , பள்ளியில் பயின்றார் .
* 1982 - இல் சண்டிகரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் .
* !984 - இல் விண்வெளி பொறியியல் துறையில் அமெரிக்கா " டெக்ஸாஸ் " பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் .
* பௌல்தேரில் 1986 இல் "கோலோரடோ " பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் ,
*1988இல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார் .
முதல் விண்வெளி பயணம் :
* நாசாவில் உள்ள அமெஸ் ஆராய்சிக்கூடத்தில் துணைத் தலைவராக பொறுப்பேற்றார் . பின்னர் கிளைடர்கள் , விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார் . விமானம் ஓட்ட அனுமதி பெற்று , பயிற்சியும் அளித்தார் .
* 1997 இல் கொலம்பியா விண்வெளியில் பயணம் செய்து சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து பூமிக்கு திரும்பினார் .
* தொடர்ந்து பயிற்சி பெற்று விண்வெளியின் இரண்டாவது பயணத்திற்கு ஆயத்தமானார் .
இறுதிப் பயணம் :
* தனது இரண்டாவது பயணம் எஸ். டி .எஸ் .107 என்ற கொலம்பியா விண்கலம் அமெரிக்க கென்னடி நிலையத்திலிருந்து 16.01. 2003 இல் விண்வெளிக்குப் பயணமானார் .
* கல்பனா சாவ்லா உடன் 7 பேர் படக்குழு 16 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய போது, டெக்ஸாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்து சிதறியது .
* பிப்ரவரி 1-2003 அன்று தன் கணவர் (விமானப் பயிற்சி ஆசிரியர்) மற்றும் இரண்டு குழந்தைகளையும் விடடுப் பிரிந்தார்.
அதுவே கல்பனா சாவ்லாவின் இறுதி பயணமானது .
விருதுகளும் அங்கீகாரங்களும் ;
* தமிழக அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு முதல் "கல்பனா சாவ்லா"என்ற விருது வழங்கி வருகிறது.
* நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல் பெற்றார்.
* நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல் பெற்றார்.
முடிவுரை :
தன் கனவை நனவாக்கிய சாதனைப்பெண் கல்பனா சாவ்லா . பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்து இந்தியாவிற்கு உலகப் புகழை பெற்றுத் தந்தார் . இவர் இந்தியாவின் " முதல் விண்வெளி ஆராய்ச்சிப் பெண்மணி " என்ற சிறப்புக்குரியவரை நாமும் போற்றுவோம் .