Physics, asked by sathishsanthosh12210, 2 months ago

இரும்பின் வகைகள் மற்றும் பயன்கள் எழுதுக​

Answers

Answered by steffiaspinno
1

வார்ப்பிரும்பு

எஃகு

தேனிரும்பு

இரும்பின் முக்கிய தாது ஹெமடைட்(Fe_{2} O_{3}) ஆகும்.  இது ஒரு பளபளப்பான உலோகம். சாம்பல் வெள்ளை நிறமுடையது.  இழுவிசை, தகடாக்கும் தன்மை, மற்றும் கம்பி ஆக்கும் தன்மையை பெற்றிருக்கும். காந்தமாக மாற்ற இயலும்.

வேதிப்பண்புகள்:

  • காற்றுடன் சூடேற்றும் போது வினைபுரிந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.
  • இரும்பானது ஈரக் காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்குகின்றது.
  • செஞ் சூடேற்றிய இரும்பின் மீது நீராவியை பாய்ச்சும்போது மேக்னெட்டிக் ஆக்ஸைடு உருவாகிறது.

இரும்பின் வகைகள் மற்றும் பயன்கள்:

  • வார்ப்பிரும்பு: (2%-4.5% கார்பன் உடைய இரும்பு)

ஸ்டவ்கள், கழிவுநீர் குழாய்கள், ரேடியேட்டர்கள், கழிவுநீர் சாக்கடை மூடிகள், இரும்பு வேலிகள் ஆகியவற்றை உருவாக்க பயன்படுகிறது.

  • எஃகு: (0.25%-2% கார்பன் உடைய இரும்பு)

கட்டிட கட்டுமானங்கள், எந்திரங்கள் மின் கடத்து கம்பிகள், டிவி கோபுரங்கள், உலோகக் கலவைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது.

  • தேனிரும்பு: (<0.25% கார்பன் உடைய இரும்பு)

கம்பிச்சுருள், மின் காந்தங்கள் மற்றும் நங்கூரம் இவற்றை செய்ய பயன்படுகிறது.

Similar questions