எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக
Answers
Answer:
(i) மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும், பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
(ii) அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
(iii) தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
(iv) அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.
(v) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை’ என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.