காளையில் மல்லிகை மனம் வீசியது
Answers
Explanation:
இன்னிக்கு காலைல சின்னவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அப்படியே பக்கத்துல இருக்க சூப்பர் மார்க்கெட் போனேன், கடைக்குள்ள போனதும் கண்ணில் பட்டது "மல்லிகை பூ". பார்த்தவுடன் சந்தோஷம் பூவை பார்த்து எத்தனை நாள் ஆகுது,அதுவும் மல்லிகை சொல்லனுமா? கிப்ட் பேப்பர் ஒன்னு வாங்கனும் மேல போய் எடுத்துட்டு அப்பறம் பூ எடுக்கலாம்ன்னு நேரா மாடி ஏறியாச்சு, ஆனா அங்க மனசு நிக்கல, மல்லிகை பூவை பத்தியே மனம் சுத்துச்சு, வாங்கலாமா? வேண்டாமா?இந்த யோசனை தான்.
அங்க இருக்கறது மல்லிகை தான், ஆனா நெருக்கமா கட்டி இருக்காது, மணம் இருக்காது, குண்டு குண்டா கண்ணை பறிக்காது, சாப்ட்டு 10 நாள் ஆன கணக்கா இருக்கும், இது பேருக்கு தான் மல்லிகை வாங்கலாமா வேணமா? மேலே நான் தேடியது கிடைக்கல, கீழே வந்ததும் பூ அழைத்தது, மனம் ஏங்கியது, மூளை தடுத்தது, பொய்யாய் காய் வாங்க ஒரு சுற்று சுற்றினேன், காரணம் மனம் முழுக்க மல்லிகையில் சுற்றியதால். ஆனால் முளை தடுத்தது, ஆசைபட்டதெல்லாம் வாங்க கூடாது என்று தத்துவம் பேசியது,மனம் எதிர்த்தது நான் ஆசைபட்டதையெல்லாம் வாங்குபவள் அல்ல, அப்ப மணமே இல்லாத மல்லிகையை வாங்காதே என்று மூளை உத்தரவு போட்டது யாரு சொல்றத கேக்க? முடிவில் மனம் வென்றது, மல்லிகை பூவை எடுத்துவிட்டேன், கடையை விட்டும் வெளியே வந்தும் மல்லிகை பூ எங்கோ இழுத்து சென்றது, பழைய நினைவுகளை கண்ணில் காட்டியது, எத்தனை ஆசை இந்த மல்லிகை பூக்கு, ஆனால் நான் படித்த பள்ளியில் பூ வைக்க அனுமதி இல்லை, விடுமுறை நாள் மட்டும் வைத்தாயிற்று, அதுவும் ஒரு முழம் குறையாமல் ....இந்த ஊரில் எப்பவாது கிடைக்கும் பூவில் ஒரு ஜீவனும் இருக்காது, உதிரி பூவா கிடைச்சா கூட நெருக்கமா கோத்து வைக்கலாம், அதுவும் இல்லை, எனக்கு பூ கட்ட தெரியாது தான், கட்டுவதற்க்கு வாய்ப்பு அமைந்ததில்லை, ஊரில் செட்டில் ஆகும் போது பூ கிடைக்கும் போது கட்டி பழகலாம் என்று தோன்றியது, ஆனால் கனகாம்பரம் பூ கட்டி பழகிய போது எட்ட எட்ட வந்து படுத்தியது எல்லாம் நினைக்கும் போது சிரிப்பு தான் வந்தது, தாத்தாவின் தோட்டத்தில் எத்தனை கனகாபர செடி இருந்தது?
லீவில் ஊருக்கு போனால் நானும் என் மாமா பொண்ணும் போட்டி போட்டு பறிப்போம், என் சின்ன தாத்தாவின் தோட்டத்திலும் எத்தனை செடி ? எல்லா பூவையும் மொத்தமாய் பறிப்போம், என் சித்தி கட்டும்போது ஆசையா இருக்கும் மொத்தமாய் கட்டி பார்க்கையில் , தாத்தாவின் ஊரை மனதில் நிறுத்தியதில் அங்கு அடுத்து நினைவுக்கு வந்தது என் மாமாவின் மனைவி, என் தோழி ...எங்கள் நட்பின் கால அளவு ஒரு நாள் மட்டும் தான், அதிகம் பார்த்தது இல்லை,சிறுவயதில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் மனதில் நிழல்களாய் தெரியும் ...ஒரே ஒரு முறை சிறுவயதில் பார்த்ததால்.... ஆனால் எனக்கு திருமணம் முடிந்து நான் இங்கு வந்த பிறகு அவள் திருமண மாகி அங்கு வந்தாள்,நான் ஊருக்கு போயிருந்த போது ஒரே ஒரு நாள் மட்டுமே நாங்கள் ஒன்றாய் இருந்தோம் என் தாத்தாவின் ஊரில் , ஒன்பது வருடங்களுக்கு முன், அன்று எத்தனை கதைகள், எத்தனை பகிர்வு, சந்தோஷம் உறவில் கிடைத்த முதல் தோழி அவள்... மறுநாள் ஊருக்கு கிளம்பும் போது பாதி வழி ஒன்றாய் வந்தோம், அதற்க்கு பிறகு அவரவர் பஸ் பிரிய வேண்டும், பஸ் ஸ்டாண்டில் இருவரும் பிரிய மனம் இல்லாமல் ஒரே அழுகை, இனி எப்ப பார்ப்போம் என்றே தெரியாது .. கைகளை இறுக பிடித்து கொண்டோம் விட மனம் இல்லை, இருவர் கண்களிலும் கண்ணீர் மட்டும், பஸ்க்கு நேரமாகுது உடன் இருப்பவர்கள் குரல்..