India Languages, asked by anusuyaabi1, 1 month ago

வைகை என்பதை தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்தி காட்டுக​

Answers

Answered by alagarnirmaladevi
6

தனிமொழி:

ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது தனிமொழி எனப்படும்.

(எ.கா) ஆ, வா, நில், படித்தான்.

இங்கே, எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனிச்சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைத் தந்து வந்துள்ளன.

தொடர்மொழி:

தனிமொழிகள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும்.

(எ.கா)

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இங்கே தனிச்சொற்கள் பல சேர்ந்து வந்து பொருளைத் தந்துள்ளன.

பொதுமொழி:

ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும். அதாவது, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது.

(எ.கா) தாமரை

தாமரை என்னும் ஒரு சொல், தனிமொழியாக நின்று தாமரை மலர் என்னும் பொருளைத் தரும்.

தாமரை என்னும் ஒரு சொல்லையே தா+மரை என்றும் பிரிக்கலாம். இவ்வாறு பிரித்தால் தாவுகிற மான் என்னும் தொடர்மொழியாகப் பொருளைத் தருகிறது. ‘தா’ என்னும் சொல் இங்கே தாவுதலையும் ‘மரை’ என்னும் சொல் மானையும் குறிக்கிறது.

Explanation:

Another example:

எ.கா: ' வேங்கை ' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .

  • தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .

  • தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும்

  • பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது .

HOPE IT WILL HELP YOU OUR TAMIL TEACHER HAD THOUGHT THIS TO ME.

AND ALSO SAID WHEN YOU DO A SENTENCE THEN YOU WILL GET PRACTICE.

YOU CAN TRY NOW. IF YOU DON'T GET YOUR ANSWER I WILL TELL THE ANSWER WITH OTHER EXAMPLE

Answered by sejeenaxavier
11

Answer:

வைகை: வைகை என்னும் நதியே கூறும்போது ஒரே சொல்லால் ஒரே பொருளாய் உணர்வது ஆனால் இது தனி மொழி ஆகும்

வைகை: வைரம்+கை என்ன பிடிக்கும் போது வைகின்ற கை என பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது தொடர் மொழி ஆகும்

வைகை: வைகை என்ற நதியையும் வைக்கின்ற கை என பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது பொது மொழி ஆகும்

i hope it will helpfull for you

plz mark brainleist answer

it will help you

Similar questions