Hindi, asked by kkowsick56, 12 hours ago

வேங்கை என்பதைத்தொடர் மொழியாகவும்ஒரு பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்
வும்

Answers

Answered by suthibasuthiba4
6

Answer:

வேங்கை

Explanation:

வேங்கை என்னும் சொல் மரத்தைக் குறிக்கும் .வேம்+கை எனவும் தொடர்மொழியாய்ப் பிரிந்து நின்று வேகின்ற கை எனவும் பொருள் தரும்.இது இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது. Brainlist please

Answered by alagarnirmaladevi
3

Explanation:

தனிமொழி:

ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது தனிமொழி எனப்படும்.

(எ.கா) ஆ, வா, நில், படித்தான்.

இங்கே, எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனிச்சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைத் தந்து வந்துள்ளன.

தொடர்மொழி:

தனிமொழிகள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும்.

(எ.கா)

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இங்கே தனிச்சொற்கள் பல சேர்ந்து வந்து பொருளைத் தந்துள்ளன.

பொதுமொழி:

ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும். அதாவது, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது.

(எ.கா) தாமரை

தாமரை என்னும் ஒரு சொல், தனிமொழியாக நின்று தாமரை மலர் என்னும் பொருளைத் தரும்.

தாமரை என்னும் ஒரு சொல்லையே தா+மரை என்றும் பிரிக்கலாம். இவ்வாறு பிரித்தால் தாவுகிற மான் என்னும் தொடர்மொழியாகப் பொருளைத் தருகிறது. ‘தா’ என்னும் சொல் இங்கே தாவுதலையும் ‘மரை’ என்னும் சொல் மானையும் குறிக்கிறது.

Explanation:

Another example:

எ.கா: ' வேங்கை ' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .

தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .

தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும்

பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது .

HOPE IT WILL HELP OUR TAMIL TEACHER HAD THOUGHT THIS TO ME.

ARE YOU 10TH STATE BOARD.IT IS THE 10TH QUESTION

Similar questions