அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார் ?
Answers
Answer:
அன்னை மொழி யே! அழகாய்
அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப்
பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
கடல் கொண்ட குமரிக் கண்டத்தில்
நிலைத்து அரசாண்ட மண்ணுல கப்
பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே!
திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
பத்துப் பாட்டே! எட்டுத்தொகையே
பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த
சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்.
செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே!
சொல்லுதற்கரிய நின் பெருமைதனை
என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறு
விரித்துரைக்கும்? பழம் பெருமையும்
தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும்கொண்ட தமிழே!
வியக்கத்தக்க உன் நீண்ட
நிலைத்த தன்மையும் வேற்று மொழியார்
உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும்
எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன. எம்
தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத்
தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது
போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து
உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை
எங்கும் முழங்குகின்றோம் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் இப்பாடலின் புகழை எடுத்ததுரைக்கிறார்.
Answer:
தமிழ் மொழி பழமைக்கு பழமையாய் உள்ளது கடல் கொண்ட குமரி கண்டத்தில் நிலைத்து ஆட்சி செய்தது பாண்டிய மன்னனின் மகளாக வளர்ந்தது திருக்குறளில் பெருமையை உரியதாய் விளங்குகிறது
Explanation:
இவையெல்லாம் அன்னைத் தமிழின் புகழை பெருஞ்சித்திரனார் எடுத்துக் கூறியதாகும்