World Languages, asked by anu2032010shka, 12 days ago

இசிலம்புத்க கணினி - தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ்


please answer correct✅​

Answers

Answered by debnathmanju7
0

Answer:

மனப்பாடம்

தமிழுக்கு அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

ஏற்றத் தாழ்வற்ற ———- அமைய வேண்டும்.

அ. சமூகம் ஆ. நாடு இ.வீடு ஈ. தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு —– ஆக இருக்கும்.

அ. மகிழ்ச்சி ஈ. கோபம் இ. வருத்தம் ஈ. அசதி

3. நிலவு+என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———–.

அ. நிலயென்று ஆ. நிலவென்று இ. நிலவன்று ஈ. நிலவுஎன்று

4. தமிழ்+எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———–.

அ. தமிழங்கள் ஆ. தமிழெங்கள் இ. தமிழுங்கள் ஈ. தமிழ்எங்கள்

5. ‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக்கிடைப்பது ———–.

அ. அமுது+தென்று ஆ. அமுது +என்று இ. அமுது + ஒன்று ஈ. அமு+தென்று

6. ‘செம்பயிர்’ என்னும்சொல்லைப் பிரித்தெழுதக்கிடைப்பது ———–.

அ. செம்மை+பயிர் ஆ. செம்+பயிர் இ. செமை+ப்யிர் ஈ. செம்பு+பயிர்

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

விளைவுக்கு – பால்

அறிவுக்கு – வேல்

இளமைக்கு – நீர்

புலவர்க்கு – தோள்

விடை:

விளைவுக்கு – நீர்

அறிவுக்கு -தோள்

இளமைக்கு – பால்

புலவர்க்கு – வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.

பேர் – நேர்

பேர் – நீர்

பேர் – ஊர்

பால் – வேல்

வான் – தேன்

தோள் – வாள்

குறுவினா

பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

அமுது, நிலவு, மணம்

நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

நாங்கள் தமிழை ஒளியுடனும் , வண்ணங்களுடனும், அணிகலன்களுடனும் ஒப்பிடுவோம்.

சிறுவினா

இன்பத் தமிழ் பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

தமிழுக்கு அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

சமூக ஒழுங்கமைவுக்குக் காரணமான உழவுத்தொழிலுக்கு அடிப்படையானது நீர். எனவே, நீர் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது.

மேலும் நீர் பாகுபாடு பார்ப்பதில்லை. அனைத்தையும் தூய்மைப்படுத்தும். அது மழைவடிவிலோ அல்லது ஆறாகவே வந்து சேரும் இடமெல்லாம் பயனளிக்கும். கடலில் உள்ள நீர்க்கூட தன் வளங்களைத் தன்னை நாடிவரும் அனைவருக்கும் கொடுக்கும்.

எனவே, நீர் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது.

சிந்தனை வினா

வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?

வேல் என்பது ஓர் ஆயுதம். எனினும் அது தமிழ்க் கடவுளாம் செவ்வேலின் கையில் இருப்பது. அடையாளமாகத் திகழ்வது எனவேதான் தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது.

வேல் கூர்மையானதும் செம்மையானதும் ஆகும். அதுபோல தமிழும் செம்மையானது. ஆதலால் தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது

Similar questions