எங்கள் தமிழ்' பாடயில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
தமிழ்மொழியின் பண்புகள்:
தமிழ்மொழி , அருள்நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகள்:
தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.
தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்கள்.
எல்லா மனிதர்களும் இன்புற்று வாழும் நெறிகள்:
கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
தமிழ்மொழி தேன் போன்றது:
நம் தமிழ் மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
அஃது அச்சத்தைப் போக்கி இன்பத்தைத் தரும்.
எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.
Explanation:
if it helps you mark me as brainliest plss
Similar questions