India Languages, asked by gayathri12ab, 1 month ago

வினா: ஐவகை நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களின் வீர விளையாட்டுகளைப் பற்றியும் அறிந்து வருக.​

Answers

Answered by SujalBendre
0

Answer:

i \: hope \: its \: helps \: you \:  \\ then \: plej \: plej \: mark \: me \: \\  as \: brainlist \: i \: needed \: it \\  \: most</p><p>

அந்நிலங்களின் வீர விளையாட்டுகளைப் பற்றியும் அறிந்து வருக.

Answered by Itzzhoneycomb
3

Answer:

மலையும் மலை சார்ந்த நிலமும் -- குறிஞ்சி

காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை

வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம்

கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல்

மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் – பாலை

ஏறுதழுவுதல்

முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனியுடன் விளங்கும். அந்நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ்செல்வம். மாடுகளில் ஆண்டையுடையது எருது. அதனை ஏறு என்றும் காளை என்றும் கூறுவர். விறுடைய ஏறுகள் கடும்புலியையும் நேர்நின்று தாக்கும். வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீறிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழர் போற்றுவர்.

மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளைகளைக் கண்டு ஆயர்குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை. அவற்றின் கொட்டத்தை அடக்க மார் தட்டி நிற்பர். ஏறுகோள் (4) என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளியில் வரும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒருகாளை, கலைந்து பாயும் ஒரு காளை, தலை நிமிர்ந்து திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கம் ஒரு காளை.

vanakkam nanba answer useful ah irukum nu namburan!☺

Similar questions