மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை?அவை யாவை?
Answers
Explanation:
தமிழ் எழுத்துகள் 33. மொழிமுதல் எழுத்துகள் 22, மொழியிறுதி எழுத்துகள் 24 (புணரியல் நூற்பா 1)
பழந்தமிழ்ச் சொற்கள் தெரியவரும் என்பதால் எடுத்துக்காட்டுகள் இளம்பூரணரைத் தழுவித் தரப்படுகின்றன:
12 உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் தொகு
1. அடை [3], 2. ஆடை, 3. இடை, 4. ஈயம், 5. உரல், 6. ஊர்தி, 7. எழு [4], 8. ஏணி, 9. ஐவனம் [5], 10. ஒளி, 11. ஓளி [6] 12. ஔவிம் [7]
மெய்யெழுத்து மொழிமுதலில் வராது. உயிர்மெய் எழுத்தாகத்தான் வரும்.
க வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு
1.கலை [8], 2.காளி [9], 3.கிளி, 4.கீரி, 5.குடி, 6.கூடு, 7.கெண்டை, 8.கேழல், 9.கைதை [10], 10.கொண்டல் [11], 11.கோடை [12], 12.கௌவை [13]
த வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு
1.தந்தை, 2.தாடி, 3.திற்றி [14], 4.தீமை, 5.துணி, 6.தூணி [15], 7.தெற்றி [16], 8.தேவர், 9.தையல் [17], 10.தொண்டை [18], 11.தோடு [19], 12.தௌவை [20]
ந வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு
1.நடம், 2.நாரை, 3.நிலம், 4.நீர், 5.நுழை, 6.நூல், 7.நெய்தல், 8.நேயம், 9.நைகை, 10.நொய்யன, 11.நோக்கம், 12.நௌவி [21]
ப வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு
1.படை, 2.பாடி [22], 3.பிடி, 4.பீடம் [23], 5.புகழ், 6.பூமி [24], 7.பெடை, 8.பேடி, 9.பைதல் [25], 10.பொன், 11.போதகம் [26], 12.பௌவம் [27]
ம வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு
1.மடம், 2.மாடம், 3.மிடறு,[28] 4.மீனம் [29], 5.முகம், 6.மூதூர், 7.மெலிந்தது, 8.மேனி, 9.மையல், 10.மொழி, 11.மோதகம் [30], 12.மௌவல் [31]
ச வரிசையில் 9 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (ச, சை, சௌ வராது) தொகு
1.சாலை, 2.சிலை, 3.சீறுக, 4.சுரும்பு [32], 5.சூழ்க, 6.செய்கை, 7.சேவடி, 8. சொறிக [33], 9.சோறு
வ வரிசையில் 8 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (வு, வூ, வொ, வோ வராது) தொகு
1.வளை [34], 2.வாளி [35], 3.விளரி [36], 4.வீடு, 5.வெள்ளி, 6.வேர், 7.வையம் [37], 8.வௌவு [38]
ஞ வரிசையில் 3 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (ஞா, ஞெ, ஞொ) தொகு
1.ஞாலம், 2.ஞெகிழி [39], 3.ஞொள்கிற்று [40]
ய வரிசையில் 1 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (யா) தொகு
1.யான்
குற்றியலுகரம் 1 தொகு
1.நுந்தை (இது முறைப்பெயர். உன் தந்தை எனபது இதன் பொருள். இச் சொல்லின் முதலெழுத்தை இதழ் குவியாமல் ஒலித்தால் அப்போது அச்சொல் குற்றியலுகரம். இச்சொல்லையே இதழ் குவிய ஒலித்தால் அப்போது அச்சொல்லின் முதலெழுத்து முற்றியலுகரம்.
(இடைச்சொல் ஙகரம்) உரையாசிரியர்கள் இதனைக் கணக்கில் கொள்வதில்லை தொகு
'ங' எழுத்து மொழிக்கு முதலில் வராது. எனினும் தனிப்பொருள் தரும் துணைப்பெயராக வருவதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[41] தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் இதற்கு வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என்னும் எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளார்.
நன்னூல் 'ங' எழுத்தை மொழிமுதாகும் எழுத்தோடு இணைத்துள்ளது.
தொல்காப்பிய முறைமை காட்டும் பட்டியல் தொகு
தொல்காப்பியத்துக்கு முந்தைய தமிழ்நூல்களின்படிமொழிமுதல் எழுத்துகள் [42]
எழுத்து வரிசை எண்ணிக்கை எடுத்துக்காட்டு
உயிர் வரிசை 12 அடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எலி, ஏணி, ஐவனம், ஒளி, ஓக்கம், ஔவியம்
க வரிசை 12 கலை, காலை, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேயல், கைதை, கொண்டல், கோடை, கௌவை
ச வரிசை 9 அ, ஐ, ஔ நீங்கலாக சாலை, சிலை, சீற்றம், சுரும்பு, சூழ்க, செய்க, சேண், சொல், சோறு
ஞ வரிசை 3 ஆ, எ, ஒ மூன்றில் மட்டும் ஞாலம், ஞெகிழி [39], ஞொள்கிற்று [43]
த வரிசை 12 தத்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை
ந வரிசை 12 நண்டு, நாரை, நிலம், நீர், நுங்கு, நூல், நெய், நேயம், நைகை [44], நெடி, நோக்கம், நௌவி [45]
ப வரிசை 12 படை, பாடி, பிடி, பீர்க்கு, புகழ், பூண்டு, பெண், பேய், பைதல், பொன், போர், பௌவம் [46]
ம வரிசை 12 மடல், மாடு, மிடல் [47], மீன், முள், மூடி, மெய், மேனி, மையல், மொழி, மோதகம் [48], மௌவல் [49]
ய வரிசை 1 (யா மட்டும்) யான், யாண்டு, யாறு
வ வரிசை 8 உ, ஊ, ஒ, ஓ நீங்கலாக வலை, வானம், விலை, வீடு, வெள்ளி, வேம்பு, வையம், வௌவுதல்
குற்றியலுகரம் 1 நுந்தை [50]
- ஆக மொத்தம் 94 -
Answer:
மொழிக்கு முதல் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு. அவை உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து ஆக இருபத்திரண்டு.
எ – டு :
- அன்பு, ஆடு, இலை, ஈகை, உரல், ஊசி, எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓணாண், ஔவை – இவை உய முதல் எழுத்துகளாக அமைந்தன.
- கலம், ஙனம், சங்கு, ஞமலி, தமிழ், நலம், பழம், மலர், யவனம், வளம் – இச்சொற்களில் மெய்கள் முதலில் நிற்பதால் மெய்முதலாகும். “பன்னீ ருயிரும் கசதந பமவய ஞங ஈரைந்து உயிர்மெய் மொழிமுதல்” என்பது நன்னூல் நூற்பா (102)].