பொருள் ஒன்றின் சராசர் திசைவேகம் மற்றும் சரனார் வேகம் அகியவற்றின் எண் மதிப்புகளின் தகவு - அ). ஒன்று ஆ). ஒன்று (அ)ஒன்றைவிடக்குறைவு இ) ஒன்று அல்லது ஒன்றைவிட அதிகம் ஈ) ஒன்றை விடக்குறைவு
Answers
Explanation:
திசைவேகம் அல்லது விரைவு (velocity) என்பது ஒரு பொருளின் குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் ஆகும். குறிப்பிட்ட நேர அலகுக்கு (எடுத்துக்காட்டாக ஒரு நொடிக்கு) ஒருதிசையில் ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்கு இடம்பெயர்கிறது என்பது திசைவேகம் ஆகும். திசைவேகமானது அதன் பருமையாலும், இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது (எ.கா: வடக்கு நோக்கி 60 கி.மீ./மணி (km/hr)). பொருள்களின் இயக்கத்தை விவரிக்கும் செவ்வியல் இயக்கவியலின் ஒரு கிளைப்பிரிவாகிய இயக்கவடிவியலில், திசைவேகம் என்பது ஓர் அடிப்படையான முதன்மை வாய்ந்த கருத்துரு ஆகும்.
விரைவு (திசைவேகம்)
US Navy 040501-N-1336S-037 The U.S. Navy sponsored Chevy Monte Carlo NASCAR leads a pack into turn four at California Speedway.jpg
வளைந்த வழித்தடத்தில் பந்தயச் சீருந்துகள் திரும்பும்போது திசையில் மாற்றம் ஏற்படுவதால், அவற்றின் திசைவேகங்கள் நிலையாக அமைவதில்லை.
பொதுவான குறியீடு(கள்):
v, v
SI அலகு:
m/s
திசைவேகம் என்பது இயற்பியல் நெறிய (திசையன்) அளவாகும். இதனை வரையறுக்க அதன் பருமையும் (magnitude), திசையும் வேண்டும். திசைவேகத்தின் பருமை வேகம் (speed) ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கியைவான கொணர்வு அலகைப் பெற்றுள்ளன. இவற்றின் அளவு பன்னாட்டுச் செந்தர அலகு முறையில் (மெட்ரிக் முறை) மீட்டர்/நொடி (m/s) யால் அளக்கப்படுகிறது. இதன் பசெ (SI) அடிப்படை அலகு m⋅s−1 ஆகும். எடுத்துகாட்டாக, "5 மீட்டர்கள்/ நொடி" என்பது அளவன் ஆகும்; ஆனால், "5 மிட்டர்கள்/நொடி கிழக்கில்" என்பது நெறியன் ஆகும்.
ஒரு பொருளின் வேகத்திலோ, திசையிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றம் நிலவினால், அப்போது அப்பொருளின் திசைவேகம் மாறுவதாகவும், முடுக்கமுறுவதாகவும் கூறப்படும். திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் முடுக்கம் ஆகும். முடுக்கம் ஒரு பொருளின் திசைவேகம் காலத்தை பொறுத்து மாறும் வீதத்தைக் குறிக்கும்.