காவடிச்சிந்து ஒரு வழிநடைப் பாடல் – இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க.
Answers
Answer:
முருக வழிபாடு :
குன்றுதோறும் கோவில் கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகன். அந்த முருகப் பெருமானை வழிபடச் செல்வோர், பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் வைத்துத் தோள்களில் இட்டுச் சுமந்து செல்வர். இது, தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.
காவடி எடுத்தல் :
காவடி எடுத்துச் செல்வதைச் சுமையாகக் கருதாமல், சுகமாக எண்ணி, வழிநடையில் மணிகளை ஒலித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாதசாரிகள் செல்வர். இது, தமிழ்நரட்டில் பண்டைக்காலம் முதல் ‘நாட்டார் வழக்கியல்’ என்னும் இசைமரபோடு கூடியதாக அமைந்துள்ளது.
முருகன் பெருமை :
‘காவடிச்சிந்தின் தந்தை’ எனப் போற்றப் பெறுபவர், சென்னிகுளம் அண்ணாமலையார். இவர் பாடிய காவடிச்சிந்து, அருணகிரியாரின் திருப்புகழ் தந்த தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.
மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு
கழுகுமலை முருகனை வழிபடக் காவடி எடுத்துவரும் அடியவர்கள் பாடும் பாடல் முழக்கம், வானுலகத்திலுள்ள தேவர்களின் செவியைச் சென்றடையும் என்கிறார். அண்ணாமலையார் சிந்தில், கழுகுமலை முருகன் சிறப்புகள், அருள்புரியும் திறம், பக்தர்கள் வழிபடும்முறை எனப் பலவும் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளன.
வழிநடைக் களைப்பின்றி, முருகன் அருள்பெற நல்வழி காட்டுவதாக, அண்ணாமலையார் காவடிச் சிந்து அமைந்துள்ளது. பயணக் களைப்பைப் போக்குவதோடு, வழி இடையே விலங்குகளின் தொல்லைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் காவடிச்சிந்து உதவுகிறது.
Explanation:
this will help u. iam also tamil 11std