India Languages, asked by avanthikasen2008, 29 days ago

ஒரு மனிதன் வாழ்க்கைப் பயனம் பற்றிய கட்டுரை​

Answers

Answered by ericpicx
2

வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்க்கையில் எவ்விதமான தடைகளோ வேதனைகளோ அவமானங்களோ இல்லை. ஆனால் சாதிக்க நினைக்கும் சரித்திர வாழ்வில் தடைகளும் வலிகளும் அதிகம் தானே. இப்படித் தான் வாழவேண்டுமென்று ஒரு சாராரும் எப்படியாவது வாழலாம் என்று ஒரு சாராரும் வாழ்கின்றனர். இவர்களால் கூட வாழ்ந்து விட இயலும். ஆனால் இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் இருக்கும் இடைப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையே கடினமானதாக இருக்கிறது.

சுயத்தைத் தொலைத்து விட்டு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு வாழ்பவர்களின் நிலையோ அடிமை முறையாக உள்ளது. இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போகலாம் என்ற மன நிலையினரோ உப்பு சப்பில்லாமல் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். இவர்கள் இந்த பூமியில் எந்த சுவடையும் விட்டுச் செல்வதில்லை.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2347295

Answered by pratyush1493
1

Answer:

மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி, உண்முக ஆய்வு, பிரச்சனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனித இனம், வேறெந்த உயிரினங்களைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மனிதர்கள் உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்த்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந்தொகையாக வாழ்கின்றனர். ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மொத்தமாக ஏழு பில்லியன் சனத்தொகையுடன் மனித இனம் இவ்வுலகில் வாழும் மிகப்பெரிய பாலூட்டி இனங்களுக்குள் ஒன்றாகத் திகழ்கின்றது. மனித இனத்தின் மிகப்பெரிய அளவிலான சனத்தொகை ஆசியாவிலும் (61 %),மீதி சனத்தொகை அமெரிக்கா (14 %),ஆபிரிக்கா (14 %),ஐரோப்பா (11 %) மற்றும் ஓசியானியா (0 .5 %) போன்ற கண்டங்களிலும் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சேப்பியென்சு சேப்பியெசு எனும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.

பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புகள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.

I Hope this answer is helpful and please mark me as brainliest.

Similar questions