குழி லென்ஸ் குவிலென்ஸ் வேறுபடுத்துக
Answers
Answered by
0
Answer:
இயற்பியலில் வில்லை ஒன்றின் இருபக்கமும் குவிந்து இருந்தால், அது குவிவில்லை (Convex lens) என்றழைக்கப்படுகிறது. இவை குவிலென்சுகள் என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகின்றன. இலங்கையில் குவிவு வில்லை என்றும் அழைக்கப்படுகிறது. இது தன்மீது விழும் இணை ஒளிக்கற்றைகளை, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கும் இயல்பைப் பெற்றுள்ளது. குவிவில்லைகளில் பலவகை உள்ளன. நம் கண்ணில் இருப்பது, இருபக்க குவிவில்லை ஆகும்.
Answered by
1
குவிந்து இருப்பின் அது குவி லென்ஸ் எனப்படும். இரு பக்கப் பரப்புகளும் குழிவாக இருந்தால் அது குழி லென்ஸ் என அழைக்கப்படும்.
- காமிரா லென்ஸாகப் பயன்படுவது குவி லென்ஸ்.
- டெலஸ்கோப்பின் கண்ணருகு லென்ஸ் குறைந்த குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.
- டெலஸ்கோப்பின் பொருளருகு லென்ஸ் அதிக குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.
- கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸ் அதிக குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.
- கூட்டு நுண்ணோக்கியின் பொருளருகு லென்ஸ் குறைந்த குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.
- எளிய நுண்ணோக்கியில் குறைந்த குவிய தூரமுள்ள குவி லென்ஸ் பயன்படுகிறது.
- கிட்டப் பார்வையை சரி செய்ய குழி லென்ஸ், தூரப் பார்வையை சரி செய்ய குவிலென்ஸ்.
- குழி லென்சின் குவிய தூரம் ‘மைனசில்’ குறிப்பிடப்படும்.
- குவிலென்சின் குவிய தூரம் ‘பிளஸ்ஸில்’ குறிப்பிடப்படும்.
- லென்சின் திறன் டாயப்டர் அலகால் குறிப்பிடப்படும்.
- லென்சின் திறன் அதன் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம்.
Similar questions