மல்லல் மூதூர் வயவேந்தே சொல்லின் பொருள் என்ன?
Answers
மல்லல் மூதூர் வயவேந்தே சொல்லின் பொருள் என்ன?
Answer:
மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் வளம் என்பதாகும்.
இந்த தொடரானது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி பொதுவியல் திணையில், பொருண் மொழிக்காஞ்சி துறையில் பாடப்பட்ட புறநானூறு பாடல் வரி ஆகும்
இந்த பாடலின் ஆசிரியர் குடபுலவியனார் ஆவார். இவர் சங்கக் காலப் புலவர்களுள் ஒருவர்.
அரசருக்கருகில் இருந்து ஆலோசனை தருவதில் சிறப்பு மிக்கவர்.
சங்க கால மக்களின் வாழ்க்கை முறைகளை அறிய இவரது பாடல்கள் பெரிதும் உதவகின்றன.
இவர் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி செய்யும் மதுரை ஊரின் வளத்தைப் பற்றிக் கூறும் போது, வான் அளவு உயர்ந்த மதிலைக் கொண்ட வளங்கள் நிறைந்த பழமையான ஊரின் தலைவரே எனத் தொடங்குகிறார்.
எனவே மல்லல் என்றச் சொல்லின் பொருள் வளம் என்பது ஆகும்.
Explanation:
வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்ய வேண்டியன என்னவென்று கூறுகிறேன். கேட்பாயாக!